Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/மதீனாவில் நோயால் கஷ்டப்பட்ட தமிழ்ப் பெண்ணுக்கு மதினா தமிழ்ச் சங்கம் உதவி

மதீனாவில் நோயால் கஷ்டப்பட்ட தமிழ்ப் பெண்ணுக்கு மதினா தமிழ்ச் சங்கம் உதவி

மதீனாவில் நோயால் கஷ்டப்பட்ட தமிழ்ப் பெண்ணுக்கு மதினா தமிழ்ச் சங்கம் உதவி

மதீனாவில் நோயால் கஷ்டப்பட்ட தமிழ்ப் பெண்ணுக்கு மதினா தமிழ்ச் சங்கம் உதவி

ஜூலை 29, 2025


Google News
Latest Tamil News

மதுரையை சேர்ந்த ரம்ஜான் பேகம் 8 மாதங்களுக்கு முன் உம்ரா செய்ய வந்த இடத்தில் திடீரென மூளை வாத நோயால் அவதிப்பட்டு மூன்று முறை இந்தியா அனுப்ப முயற்சி செய்தும் சில மருத்துவ தடங்கல் காரணமாக அவரது பயணம் தடைபட்டு போனது.



சுமார் 8 மாதங்களுக்கு முன் இந்த தகவலை பெற்ற மதினா தமிழ் சங்கத்தின் அஷ்ரப் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்து, கவனித்தார்.



அதற்கு பக்கபலமாக இருந்த TCS சவுதி ஹாஜிகளின் இன்சூரன்ஸ் கம்பெனி மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு தேவையான மருத்துவ செலவு மற்றும் ஸ்டெரச்சர் படுக்கை வசதி கொண்ட விமான டிக்கெட் போட்டு கொடுத்தும் மிகச் சிறப்பான பணியை செய்து கொடுத்தது.



இறுதியாக இந்திய தூதரகத்தின் வழிகாட்டுதலில் மதினா தமிழ் சங்க பொறுப்பாளர் தஞ்சை அஷ்ரப் அலி அந்த பெண்மணிக்கு உதவியாக கூடவே தாயகத்திற்கு ஜூலை 24ம் தேதி பயணித்து மதீனாவில் இருந்து கொச்சிக்கு அழைத்து வந்து, அதன்பின், ரியாத்தில் வசிக்கும் சவுதி அரேபியா மத்திய ரியாத் அயலக அணியின் அமைப்பாளர்( NRTIA ) Dr சந்தோஷ் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸில் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.



சென்னை என்.ஆர்.டி.ஐ. வழங்கிய இந்த உதவிகள், நமது தமிழர்களுக்கு தேவையான நேரத்தில் அளித்த ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இந்த சேவையை சிறப்பாக செய்து முடித்த மதினா தமிழ் சங்கம் அஷ்ரப் அலி மற்றும் NRTI Dr. சந்தோஷ் பிரேம் இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.



மாநில அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையர், சென்னை NRT தலைமையகம் மற்றும் அந்த அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் அசோக் குமார் மற்றும் கண்காணிப்பாளர் குபேரன் ஆகியோரின், அயலகத் தமிழர்கள் மற்றும் அவர்களின் நலனுக்காக எடுத்துக்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சிக்கும் எடுக்கும் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியவை.



- நமது செய்தியாளர் M Siraj







      Our Apps Available On




      Dinamalar

      Follow us