அபுதாபி: அபுதாபியில் வாழக்கூடிய தமிழ் சொந்தங்களுக்கு அயலக தமிழர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்.
அதிரை ஹாபில் பfவ்ஜான் இறை வசனம் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பைத்துல் மால் தலைவர் அதிரை A. சாகுல் ஹமீது ஹாஜியார் அய்மான் முன்னுரை வழங்கினார் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது தாரீக் அயலக தமிழர்களுக்கான கீழ்க்கண்ட சட்ட விழிப்புணர்வு வழங்கினார். NRT சொத்து உரிமைகள் மற்றும் பிரச்சனைகள், அதிகாரப் பத்திரம் மற்றும் பரம்பரை சட்டங்கள், குடும்ப சட்டம், திருமணம், விவாகரத்து, குழந்தை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கேள்வி பதில்களோடு கலந்துரையாடப்பட்டன.
மேலும் துபாய் சல்மான் பாரிஸ் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் ஆடிட்டர் சல்மான் பாரிஸ் இந்தியா வரிவிதிப்பு மற்றும் நிதி சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு அய்மான் சங்கம் சார்பில் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது. அபுதாபியில் வாழக்கூடிய தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா