/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/சலாலாவில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்சலாலாவில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
சலாலாவில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
சலாலாவில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
சலாலாவில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
ஆக 01, 2025

சலாலா: சலாலாவில் இந்திய தூதரகம், இந்திய சமூக மையத்துடன் இணைந்து தொழிலாளர் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடந்தது. முகாமுக்கு இந்திய தூதர் கோதவர்த்தி வெங்கட ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தார்.
பாஸ்போர்ட் வழங்க தாமதம் ஏற்படுவது, நிறுவனங்களில் முறையாக சம்பளம் வழங்காமல் இருப்பது, கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்திய தூதர் தலைமையில், அதிகாரிகள் வழங்கினார்.
முகாம் சிறப்புடன் நடைபெற சலாலா இந்திய சமூக மைய நிர்வாகிகள் தேவையான ஒத்துழைப்பை வழங்கினர்.
- நமது செய்தியாளர் காஹிலா