Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/சவூதி கலைக் குழுவின் “ஜெத்தா பீட்ஸ் 2024”

சவூதி கலைக் குழுவின் “ஜெத்தா பீட்ஸ் 2024”

சவூதி கலைக் குழுவின் “ஜெத்தா பீட்ஸ் 2024”

சவூதி கலைக் குழுவின் “ஜெத்தா பீட்ஸ் 2024”

அக் 07, 2024


Google News
Latest Tamil News
சவூதி கலைக் குழுவின் “ஜெத்தா பீட்ஸ் 2024” என்ற கலை நிகழ்ச்சி, நடனம் மற்றும் பாடலுடன் ஜெத்தா இதுவரை கண்டிராத சிறந்த நிகழ்ச்சியாக ரெஹாப் பகுதியில் உள்ள லையாலி அல் நூர் அரங்கத்தில் நடந்தது. சவூதி அரேபியா முழுவதும் உள்ள கலை திறமையாளர்களின் ஒருங்கிணைந்த குழுவான சவுதி ஆர்ட்ஸ் அசோசியேஷன்(சவூதி கலைச்சங்கம்) இந்த கலைநிகழ்ச்சியை வழங்கினர். இந்நிகழ்ச்சி ஜெத்தா நகரின் கலை ஆர்வலர்கள் இதுவரை கண்டிராத சிறந்த நிகழ்ச்சியாக இருந்தது.

சுமார் ஆறு வருடங்களுக்கு முன் நடந்த அமர்வில் திட்டமிடப்பட்ட “சவுதியில் உள்ள அனைத்து கலைத்திறன்களுக்கும் ஒரு தளம் வேண்டும்” என்ற தீர்மானத்தின் விளைவாக கடந்த 2022 ஆம் ஆண்டு ரியாத்தில் “ரியாத் பீட்ஸ் 2022” நடைபெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜெத்தா மக்களுக்காக ஜெத்தாவின் ரெஹாப் பகுதியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.



நிகழ்ச்சியில் ஜெத்தாவில் உள்ள சிறந்த கலை அமைப்பாளர்களின் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த கலைஞர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி வழங்கப்பட்டு நிகழ்ச்சி நேர்த்தியாக நடந்தேறியது. ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சவூதி கலா சங்கம் தலைவர் ரஹீம் (தபூக்) ஜெத்தாவில் நடக்கும் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஹஸன் கொண்டோட்டி, நவாஸ் பீமாப்பள்ளி மற்றும் செயலாளர், இணை ஒருங்கிணைப்பாளர் விஜேஷ் சந்துரு சோபியா சுனில், சங்கத்தின் பொருளாளர் பாடகர் தங்கச்சன் வயநாடு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.



ரஹீம் பரதன்னூர் தலைமையில் நடைபெற்ற விழாவை ஜெத்தா நேஷனல் ஹாஸ்பிடல் உரிமையாளர் வி.பி.முஹம்மதலி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். ஜேஎன்எச் குழுமத்தின் புதிய மருத்துவமனை குறித்த அறிவிப்பும் இந்த நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது. மேலும், ஜெத்தா மீடியா போரம் தலைவர் கபீர் கொண்டோட்டி மற்றும் மக்காவை சேர்ந்த சாலிஹ் அல் மலபாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.



ரியாத்தில் இருந்து வந்திருந்த சஜின், ஜெத்தாவில் வசிக்கும் ரஃபி பீமாபள்ளி, நிசார் மடவூர், ஜெத்தா டாக்டர் இந்து சந்திரா ஆகியோர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். எட்டு மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மொழிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பாடல்கள் இசைக்கப்பட்டன. ஜெத்தாவின் பிரபல பாடகி சோஃபி மற்றும் ட்ரைன் குழுவினர் பழைய மலையாள பாடல்களை இசைக்கருவிகளின் பின்னணியில் பாடி கலை ஆர்வலர்களுக்கு புதிய அனுபவத்தை உருவாக்கினர்.



ஃபெனோம் மற்றும் குட்ஹோப் நடனப் பள்ளி மாணவிகள் மற்றும் நடன ஆசிரியர் ஸ்ரீதா வடிவமைத்த கலகலப்பான நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. ஃபாசில் ஓச்சிராவின் மிமிக்ரி, ஹனிஃபாவின் பாரம்பரிய நடனம், ரியாத்தை சேர்ந்த தங்கச்சன், தமாமைச் சேர்ந்த ஷபானா, தமாமைச் சேர்ந்த ஷர்மிதா, புரைதா வைச் சேர்ந்த சாதிக் என பெரும்பாலான ஜெத்தா மற்றும் மக்கா பாடகர்கள் இணைந்து ஜெத்தாவை ஒரு அற்புதமான இசை மாலையுடன் கவர்ந்தனர்.



ஒலியமைப்பு இஸ்மாயில் இஜ்லுவும், ஒளியமைப்பை அஷ்ரப் வலியோராவும் திறம்பட கவனிக்க, தங்கச்சன் வயநாடு நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். ஜெத்தாவில் உள்ள முக்கிய நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் வந்திருந்தனர்.



- நமது செய்தியாளர் M சிராஜ்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us