Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் ஜமாலியன் சங்கமம் நிகழ்ச்சி

துபாயில் ஜமாலியன் சங்கமம் நிகழ்ச்சி

துபாயில் ஜமாலியன் சங்கமம் நிகழ்ச்சி

துபாயில் ஜமாலியன் சங்கமம் நிகழ்ச்சி

ஜன 16, 2025


Google News
Latest Tamil News
துபாய்: திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஐக்கிய அரபு அமீரக பிரிவு சார்பில் ஜமாலியன் சங்கமம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக துபாயில் நடைப்பெற்றது.

பாரம்பரியமிக்க திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி கல்வி பணியில் 75ம் ஆண்டு பவளவிழா காணவிருக்கும் சூழலில், கல்லூரியிலிருந்து சிறப்பு விருந்தினர்கள் துபாயில் நடைப்பெற்ற விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னாள் மாணவர் சங்க தலைவர் ஹாஜி ஜியாவுதீன் ஆலோசனைப்படி நடைபெற்ற இந்த நிகழ்வை, மாணவர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் ரஹ்மத்துல்லாஹ் தொகுத்து வழங்க, நிகழ்ச்சியின் துவக்கமாக அப்துல் வாஹிது இறைவசனம் ஓதியதை தொடர்ந்து, ஏஜிஎம் பைரோஸ் கான் வரவேற்று பேசினார்.



தொடர்ந்து துணை தலைவர் ஜாஃபர் சித்திக் விழா தலைமையுரையாற்றி கடந்த 28 ஆண்டுகாலமாக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் செய்த சேவைகளை குறிப்பிட்டு பேசினார். தொடர்ந்து பொதுசெயலாளர் முனைவர் செய்யது அலி பாதுஷா, கல்லூரியின் துணை செயலாளர் முனைவர் அப்துல் சமது, காஜமியன் விடுதி இயக்குனர் ஹாஜி முஹம்மது பாசில், கல்லூரி முதல்வர் முனைவர் ஜார்ஜ் அமலரெத்தினம், பொருளாளர் ஹாஜி எம்.ஜே. ஜமால் முஹம்மது, கல்லுரியின் செயலாளர் மற்றும் தாளாளருமான ஹாஜி காஜா நஜ்முதீன் ஆகியோர் வரலாற்று சிறப்புமிக்க ஜமால் முஹம்மது கல்லூரியில் படித்தவர்கள் எல்லாம் அயல்நாட்டில் இருந்தாலும் வரலாற்றை எழுத கூடியவர்களாக இருக்கின்றனர் எனவும், கல்லூரி வளரச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கின்றது எனவும், அதன் மூலம் கல்வி பணியை சிறப்பான முறையில் செய்ய முடிகிறது எனவும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15 அன்று நடைப்பெறும் முன்னாள் மாணவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்புவிடுத்தனர்.



அதனை தொடர்ந்து பேசிய அமீரக பிரிவு பொதுசெயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் முன்னாள் மாணவர் சங்கம் செய்து வரும் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டமிடல் குறித்தும் விரிவாக பேசினார். அமீரகத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். சிகரம் தொட்ட ஜமாலியன் விருதுகள் லேண்ட் மார்க் குரூப் செய்யது முஹம்மது சாதிக், அல் மஜாரா ஜாஹிர் உசேன், ஆடிட்டர் முஹம்மது அனஸ், அப்துல் காதர், Dr. நஸ்ருல்லாஹ், சூப்பர் சோனிக் சாகுல் ஹமீது, காயிதே மில்லத் பேரவை பரக்கத் அலி உள்ளிட்டோருக்கும், அமீரக ஆளுமை விருதுகள் Dr. லயா ராஜேந்திரன், பவர்குரூப் ஜாஹிர் உசேன், தொப்பிவாப்பா குரூப் ஒமர் முக்தார், ஐஏஎஸ் அகடமி முஹம்மது பிகே, ஜபேல்ஜாய்ஸ் வாட்டர் ஷெரிஃப், ஸ்மார்ட் லைஃப் ரெக்ஸ் பிரகாஷ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வை மன்னர் மன்னன் மற்றும் முஹம்மது அனீஸ் ஆகியோர் தொகுத்தனர். நிறைவாக ஃபஷுருதீனின் நன்றியுரையோடு நிறைவுற்ற நிகழ்ச்சியில் மதுக்கூர் ஹிதயாதுல்லா, நவாஸ்தீன், அபுசாலிஹ், முஹம்மது அலாவுதின், எஹ்யா உள்ளிட்ட முன்னாள் மாணவர் சங்கத்தினர் செய்திருந்தனர்.



75 வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ஜமால் முஹம்மது கல்லூரிக்கு நினைவு பரிசாக பவள விழா கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us