கத்தாரில் இந்திய குடியரசு தின விழா
கத்தாரில் இந்திய குடியரசு தின விழா
கத்தாரில் இந்திய குடியரசு தின விழா
ஜன 31, 2025

தோஹா: கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 76வது குடியரசு தினம் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர் விபுல் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காந்தியடிகள் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கேக் வெட்டப்பட்டது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா