ஜூன் 04, 2024

தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹா நகரில் இந்திய மாம்பழ திருவிழா சூக் வகிப் மார்க்கெட்டில் நடந்து வருகிறது.
இந்த திருவிழாவை இந்திய தூதர் விபுல், கத்தார் வெளியுறவுத்துறை அதிகாரி இப்ராஹிம் பக்ரூ, நாசர் ராஷித் அல் நைமி உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். அதனையத்து திருவிழாவில் வைக்கப்பட்டுள்ள மாம்பழ வகைகளை பார்த்து ரசித்தனர்.
இந்த திருவிழாவில் அல்போன்சா, கெசார், பாதாம், மல்லிகா உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த திருவிழாவை இந்திய மக்கள் மட்டுமன்றி கத்தார், எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்வையிட்டு மாம்பழங்களை வாங்கி செல்கின்றனர்.
கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கிய இந்த திருவிழாவானது வரும் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது செய்தியாளர் காஹிலா