/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/குவைத்தில் இந்திய கலாச்சார திருவிழாகுவைத்தில் இந்திய கலாச்சார திருவிழா
குவைத்தில் இந்திய கலாச்சார திருவிழா
குவைத்தில் இந்திய கலாச்சார திருவிழா
குவைத்தில் இந்திய கலாச்சார திருவிழா
ஏப் 19, 2024

குவைத் : குவைத்தில் உள்ள நந்தனம் நடன பள்ளிக்கூடத்தின் சார்பில் 'ரங்க பிரவேஷம் 2024' என்ற இந்திய கலாச்சார திருவிழா நடந்தது. விழாவில் இந்திய தூதரக அதிகாரி நிகில் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாரம்பரிய முறைப்படி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். இந்திய பாரம்பரிய நடன மற்றும் இசை நிகழ்ச்சி நடந்தது.
இதில் நடன பள்ளிக்கூட மாணவியர் தங்களது திறமையை வெளிப்படுத்தி பொதுமக்களின் பலத்த கை தட்டலை பெற்றனர். இதில் இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா