/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இப்தார் நிகழ்ச்சி அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இப்தார் நிகழ்ச்சி
அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இப்தார் நிகழ்ச்சி
அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இப்தார் நிகழ்ச்சி
அபுதாபியில் அய்மான் சங்கம் நடத்திய இப்தார் நிகழ்ச்சி
ஏப் 02, 2024

அபுதாபி : அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பான முறையில் ரமலான் மாதத்தில் இப்தார் நிகழ்ச்சி நடைபெறும் அதேபோல் இந்த வருடமும் நாள் 28-03-2023 அன்று இப்தார் நிகழ்ச்சி அபுதாபியில் செட்டிநாடு உணவகத்தில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது. அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச்.எம். முஹம்மது ஜமாலுதீன் தலைமை வகித்தார்.
மார்க்கத்துறை செயலாளர் மௌலவி எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி துவக்க உரை வழங்கினார். தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சொல் முரசு எம். முஹம்மது அபுதாஹிர் பாகவி சிறப்புரை வழங்கினார்கள் அய்மான் சங்கத்தின் துணை தலைவர் காதர் மீரான் பைஜீ நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் காஹிலா
நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் தொகுத்து வழங்கினார். ஆரம்பமாக மௌலானா மௌலவி அப்ழலுல் உலமா எம்.கலீலுர் ரஹ்மான் ஆலிம் பிலாலி மகனார் முஹம்மது ரூபத் இறை வசனம் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். பொதுச் செயலாளர் மெளலவி எ. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி வரவேற்புரை வழங்கினார் பைத்துல்மால் தலைவர் அதிரை எ. சாகுல் ஹமீது ஹாஜியார் அய்மான் முன்னுரை வழங்கினார்
மார்க்கத்துறை செயலாளர் மௌலவி எஸ்.எம்.பி. ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி துவக்க உரை வழங்கினார். தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் சொல் முரசு எம். முஹம்மது அபுதாஹிர் பாகவி சிறப்புரை வழங்கினார்கள் அய்மான் சங்கத்தின் துணை தலைவர் காதர் மீரான் பைஜீ நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அபுதாபி லால்பேட்டை ஜமாத் நிர்வாகிகள் , காயல்பட்டினம் நல மன்றம் நிர்வாகிகள், மர்ஹபா நலப் பேரவை நிர்வாகிகள், அபுதாபி மவ்லூது கமிட்டி நிர்வாகிகள், அபுதாபி ஜமாத் உலமா நிர்வாகிகள் மற்றும் துபாய் & அபுதாபியில் வாழக்கூடிய தமிழ் மக்கள் வெகுத்திரலாக கலந்து கொண்டார்கள்.
- நமது செய்தியாளர் காஹிலா