/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அன்னை தமிழ் மன்றம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சிஅன்னை தமிழ் மன்றம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி
அன்னை தமிழ் மன்றம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

மார் 23, 2025

பஹ்ரைனில் பல்வேறு சழூக நற்பணிகளைச் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம், இந்தியன் கிளப் உடன் இணைந்து மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் பஹ்ரைன் பாராளுமன்ற உறுப்பினர்கள் Dr. மரியம் அல் டைன், ஹனான் ஃபர்தான், பஹ்ரைன் பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரி ஹிஷாம் ஸால் கலீஃபா, சல்மான் அல் ஃபாதல் மற்றும் பல முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.
அன்னை தமிழ் மன்றத் தலைவர் செந்தில் GK, பொதுச்செயலாளர் பழனிச்சாமி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர். சுமார் 750 பேர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இந்தியன் கிளப் உப தலைவர் ஜோசப் ஜாய் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இதனைத் தொடர்ந்து அன்பு வணிகக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் அமீர் அலி சிறப்புரையாற்றினார். அன்னை தமிழ் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், தன்னாவலர்களும், மகளிர் குழு உறுப்பினர்களும் இணைந்து, பங்குபெற்ற அனைவரையும் உபசரித்து உணவளித்து மகிழ்வித்தனர்.
இறுதியாக அன்னை தமிழ் மன்றத்தின் பொருளாளரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான சுல்தான் நன்றி கூறினார்.இந்நிகழ்வு பஹ்ரைன் வாழ் தமிழர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷமான தருணமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்