
கடந்த மே மாதம் 22ஆம் தேதி நடந்த விபத்தில் நெல்லையைச் சேர்ந்த அமீர் அலி என்பவருக்கு ஜெத்தா சவுதி ஜெர்மன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சவூதி ஜெத்தா மேற்கு மண்டல அயலக அணி பொறுப்பாளர் எழில்மாறலின் அறிவுறுத்தலின் பேரில் அயலக அணி துணை அமைப்பாளர் அபு இன்பன் துரித நடவடிக்கை எடுத்து அமீர் அலி பணி செய்த நிறுவனத்திடம் பேசி அவருக்கு ஆறு மாத காலம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும், அவருடன் துணைக்கு செல்வதற்கு ஒருவரையும் நியமித்து, அவருக்கும் போக வர விமான டிக்கெட்டையும் கிடைக்க செய்து மதீனா விமான நிலையத்திலிருந்து அவரை வழியனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கு ஆரம்பம் தொட்டு உதவிய மதீனா அயலக அணி நிர்வாகிகள் நிஜாமுதீன், அப்துல் ஹமீது மற்றும் அப்துல் காசிம், மதீனா மெடிக்கல் சென்டர் கள்ளக்குறிச்சி யைச் சார்ந்த அக்பர் ஷா, இந்திய தூதரகம் ஜமால் ஜாகிர் ஆகியோரின் உதவியும் முயற்சியும் பாராட்டிற்குரியது. தகவல்:அயலக அணி ஜெத்தா மேற்கு மண்டலம்.
- நமது செய்தியாளர் M Siraj