
துபாய்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நண்பர்களால் துபாய் அல் கிசஸ் பகுதியில் நடைபெற்ற யூனிட்டி சேம்பியன்ஸ் கால்பந்து லீக் 2024 கால்பந்தாட்ட போட்டியில், அத்திக்கடை ஏ.எஸ்.டி.ஓ. அணியினர் முதல் பரிசை வென்றதுடன், சிறந்த வீரருக்கான பரிசு அந்த அணியின் முஹம்மது ஹுசைன் க்கும், சிறந்த கோல் கீப்பருக்கான பரிசு அந்த அணியின் முகமது யூசுப்தீன்க்கும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற ஏ.எஸ்.டி.ஓ. அணியினருக்கும், அணியின் ஒருங்கிணைப்பாளர்கள் அப்துல் காதர் (அன்சாரி) , முஹமது அனஸ் மற்றும் ஷாகுல் ஹமீது ஆகியோருக்கு, அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குனர் அன்வர் தின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து ஊக்கப்படுத்தினார்.
- நமது செய்தியாளர் காஹிலா