Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் சர்வதேச கலை சங்கமம்

துபாயில் சர்வதேச கலை சங்கமம்

துபாயில் சர்வதேச கலை சங்கமம்

துபாயில் சர்வதேச கலை சங்கமம்

மே 22, 2024


Google News
Latest Tamil News
துபாய் : துபாயில் பிரிட்ஜ் அகாடமியின் 2வது சர்வதேச கலை சங்கமம் நடந்தது. இந்திய துணைத் தூதர் சதீஷ்குமார் சிவன் தலைமையில் தமிழக அரசின் அயலகத் தமிழர் நலவாரிய உறுப்பினர் எஸ்.எஸ். மீரான், ராஜலட்சுமி பைன் ஆர்ட்ஸ் நிறுவனத் தலைவர் டாக்டர் சதீஷ்குமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

45 ஆசிரியர்கள் இணைந்து அரியவகை ராகங்கள் தாளங்கள் கொண்ட பாடல்களையும், 128 அக்ஷரங்களை கொண்ட சிம்மனந்தன தாளத்திலமைந்த தில்லானாவையும் பாடினர். இதனை சென்னையில் இருந்து வந்த டாக்டர் சாரதா பாரம்பரிய முறைப்படி பயிற்றுவித்தார்.



மேலும் மாலையில் 30 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து 'அழகர் குறவஞ்சி' எனும் நாட்டிய நாடகத்தை அரங்கேற்றினர். இதனை சென்னயிலிருந்து வந்த டாக்டா சுமதி அழகுடன் பயிற்றுவித்தார்.



துபாய், ஷார்ஜா, அபுதாபி, புஜேரா ஆகிய பகுதிகளில் இருந்து ஆசிரியர்களும், மாணவர்களும் கலை சங்கமத்தில் பங்கேற்று தங்களது கலைத்திறமையை வெளிப்படுத்தினர்.



பிரிட்ஜ் அகாடமியின் நிறுவனர் ரகுராமன் கூறியதாவது, இலங்கை, மலேஷியா மற்றும் இந்தியாவிலிருந்து 45 பேர் கொண்ட குழு இந்த நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது என்றார். கலை சங்கமம் விழாவுக்கான ஏற்பாடுகளை பிரிட்ஜ் அகாடமியின் அமீரகத் தலைவர் ரேணுகா பரமேஸ்வர் தலைமையிலான குழுவினர் சிறப்புடன் ஒருங்கிணைத்தனர்.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us