/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாய் நூலகத்துக்கு இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் அன்பளிப்புதுபாய் நூலகத்துக்கு இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் அன்பளிப்பு
துபாய் நூலகத்துக்கு இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் அன்பளிப்பு
துபாய் நூலகத்துக்கு இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் அன்பளிப்பு
துபாய் நூலகத்துக்கு இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் நூல்கள் அன்பளிப்பு
மே 30, 2024

துபாய் : துபாய் நகரில் உள்ள முஹம்மது பின் ராஷித் பிரமாண்ட நூலகத்துக்கு இந்திய மற்றும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் நூலக அலுவலர் அமீராவிடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் அன்பளிப்பாக வழங்கினார்.
சென்னையை சேர்ந்த எழுத்தாளர் ஜரினா ஜமால் எழுதிய விடியலைத் தேசிய வெள்ளைப்புறா என்ற சிறுகதைத் தொகுப்பு, இலங்கை, பொத்துவில் பகுதியை சேர்ந்த எழுத்தாளர் அகமது ஃபைசல் எழுதிய ஒரு தேநீர் ஒரு குவளை என்ற சிறுகதை நூலும், யானைத் தண்ணீர் என்ற கவிதை நூலும் நூலகத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நூல் அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின்னர் பொதுமக்கள் படிப்பதற்காக இடம் பெற செய்யப்படும் என நூலக அலுவலர் தெரிவித்தார்.
இந்த நூலகத்தில் ஈ.வே.ரா., அண்ணாதுரை, மு. கருணாநிதி உள்ளிட்ட முன்னணி எழுத்தாளர்களின் நூல்கள் ஆயிரத்துக்கும் மேல் இடம் பெற்றுள்ளது. திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு, மஸ்னவி ஷரீஃப்பின் தமிழ் மொழிபெயர்ப்பின் ஏழு பாகங்களும் இங்கு உள்ளது. இதனை பொதுமக்கள் வாங்கி படித்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- நமது செய்தியாளர் காஹிலா