/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் மார்க்க சொற்பொழிவுதுபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் மார்க்க சொற்பொழிவு
துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் மார்க்க சொற்பொழிவு
துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் மார்க்க சொற்பொழிவு
துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிஸ் மார்க்க சொற்பொழிவு

சென்னை, அடையாறு குராஸானி பீர் பள்ளிவாசலின் தலைமை இமாம் எம். சதீதுத்தீன் பாஜில் பாகவி 'உன்னைப் பார்த்துக்கொள்' என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.
அமீரகத்திலும், தமிழகத்திலும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்கப் பணிகளை சிறப்புடன் செய்து வரும் ஏ. முஹம்மது மஃரூப்புக்கு 'கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' என்ற சாதனை சான்றிதழை கல்லிடைக்குறிச்சி சமூக ஆர்வலர் முனைவர் ஆ. முகமது முகைதீன் இணைய வழியாக வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், காயல் இளவரசு, மௌலவி சுபையிர் அஹில் முஹம்மது, அய்மான் சங்க துணைத் தலைவர் மீரான் ஃபைஜி, இலங்கை மௌலவி நிஸ்தார், காயல் யஹ்யா முஹ்யித்தீன், இளையான்குடி அபுதாஹிர், ஜாஹிர் ஹுசைன், செய்யது கமாலுதீன், அய்மான் சங்க நிர்வாக செயலாளர் ஆடுதுறை முகைதீன் அப்துல் காதர், அஹமது ஜலால், ஹாஜி முஹம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
- நமது செய்தியாளர் காஹிலா