மே 28, 2024

அபுதாபி : அபுதாபியில் இந்தியர் நல்வாழ்வு பேரவையின் அபுதாபி மண்டலமும், அபுதாபி ரத்த வங்கியும் இணைந்து நடத்திய ரத்ததான முகாமின் போது எடுத்த படம். இந்த முகாமில் 40 க்கும் மேற்பட்டோர் தன்னார்வத்துடன் உயிர்காக்க உதவும் ரத்ததானம் செய்தனர்.
முகாமுக்கான ஏற்பாடுகளை இந்தியர் நல்வாழ்வு பேரவையின் எமனை ஷர்புதீன் தலைமையிலான குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
ரத்ததானம் செய்த பேரவையின் உறுப்பினர்களுக்கு ரத்த வங்கியின் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா