/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/இஸ்ரேலில் ஆசிய தின சிறப்பு நிகழ்ச்சிஇஸ்ரேலில் ஆசிய தின சிறப்பு நிகழ்ச்சி
இஸ்ரேலில் ஆசிய தின சிறப்பு நிகழ்ச்சி
இஸ்ரேலில் ஆசிய தின சிறப்பு நிகழ்ச்சி
இஸ்ரேலில் ஆசிய தின சிறப்பு நிகழ்ச்சி
ஜூலை 05, 2024

டெல் அவிவ் : இஸ்ரேல் நாட்டின் ரமத் கன் நகரில் உள்ள பார் இலான் பல்கலைக்கழகத்தில் ஆசிய தின சிறப்பு நிகழ்ச்சி இந்திய கலாச்சார மையத்தின் ஆதரவுடன் நடந்தது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியரின் பரதநாட்டியம் உள்ளிட்ட இசை நிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து யோகா நிகழ்ச்சியும் நடந்தது. இதிலும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா