/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை துபாயில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை
துபாயில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை
துபாயில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை
துபாயில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை
ஏப் 21, 2024

துபாய் : துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் பெய்த கனமழை காரணமாக விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விமான நிலையம் முழுவதும் தேங்கியிருந்த தண்ணீர் அகற்றப்பட்டு விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
- நமது செய்தியாளர் காஹிலா
சென்னையில் இருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானம் மூலம் கனடா, அமெரிக்கா, இலண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல வேண்டியவர்களும், அந்த நாடுகளில் இருந்து சென்னை செல்ல வேண்டியவர்களும் மீண்டும் தங்களது பயணத்தை தொடர முடிந்தது. அதுவரை அவர்கள் விமான நிறுவனத்தின் சார்பில் பத்திரமாக ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான விமான சேவையும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
- நமது செய்தியாளர் காஹிலா