/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாயில் தமிழக வரலாற்று ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்புதுபாயில் தமிழக வரலாற்று ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு
துபாயில் தமிழக வரலாற்று ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு
துபாயில் தமிழக வரலாற்று ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு
துபாயில் தமிழக வரலாற்று ஆய்வாளருக்கு உற்சாக வரவேற்பு

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இஸ்லாமிய இலக்கியக் கழக அமீரக அமைப்பாளர்கள் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், புரவலர் முஹம்மது சலீம் காக்கா, கீழை சாகுல் ஹமீது, இலங்கை நிஸ்தார் ஆலிம் நுழாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது வரலாற்று ஆய்வாளர் ச.சி.நெ. அப்துல் றஸாக் தான் மற்றும் தனது சகோதரர் மர்ஹூம் கவிஞர் ச.சி.நெ. அப்துல் ஹக்கீம் ஆகியோர் இணைந்து எழுதிய 'தொன்மையின் பன்முகம் கீழக்கரை' என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.
அப்போது பேசிய முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப், துபாய் நகருக்கு முதன் முதலாக வரலாற்று ஆய்வாளர் ச.சி.நெ. அப்துல் றஸாக் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அவர் தொன்மையின் பன்முகம் கீழக்கரை, தென்பாண்டிச் சீமையிலே ( ஏர்வாடி இப்ராஹிம் ஷஹீது வரலாற்று நவீனம்), ஆட்சி பீடம் கலீபா உமர் (ரலி) அவர்கள் வரலாறின் முதல் மற்றும் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
இந்த நூல்கள் அனைத்தும் வரலாற்று ஆய்வாக இருந்து வருகிறது. இதனை தமிழ் கூறும் நல்லுலகம் வாசித்து பயனடைய வேண்டியது மிகவும் அவசியம் ஆகும் என்றார்.
- நமது செய்தியாளர் காஹிலா