ஆக 09, 2025

இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடு்ம விதமாக ஆக-8ல் ரியாத் நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பத்தா கிளை(TNTJ)மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி (KSMC) இணைந்து நடத்திய 146 வது இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது, இந்த முகாமில் 72 குருதி கொடையாளர்கள் பதிவு செய்து 52 நபர்கள் இரத்த தானம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டல தலைவர் செய்யது இப்ராஹீம் பேசுகையில்;
இந்த இரத்ததான முகாம்கள் நடத்துவதின் நோக்கம், “இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுதல்” என்ற உயரிய சிந்தனை திருக்குரானில் 'யார் ஒரு மனிதரை வாழ வைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழ வைத்தவர் போலாவார்” குறிப்பிட்டுக் காட்டி அதன் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் மனிதத்தை நேசிக்கக் கூடியவர்கள், பிறர் நலம் பேணக்கூடியவர்கள் என்ற உண்மையை உலகிற்கு பறை சாற்றவும், ஏகஇறைவனிடத்தில் மட்டுமே இதற்குரிய நற்கூலியை எதிர்பார்த்தவர்களாகவும், இந்த மகத்தான பணிகளை செய்து வருவதாகக் கூறினார்.
மேலும், TNTJ கடந்த 19 ஆண்டுகளில் இதுவரை ரியாத்தில் மட்டும் 142 முகாம்களை நடத்தி, தேவைக்கேற்ப ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான லிட்டர் இரத்த தானம் செய்துள்ளது.TNTJ செய்த சமூக மற்றும்மனிதாபிமான சேவைகளைப் பாராட்டி, சவுதி அரசு, சுகாதாரம் மற்றும் மருத்துவமனைகள் துறையின் விருதுகள் மற்றும் சான்றிதழ்களைப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இம்முகாம் குறித்து பேசிய ரியாத்மண்டல தலைவர் செய்யது இப்ராஹீம் “பிறர் நலன் மற்றும்நோயாளிகளின் தேவை கருதி இந்த மனிதநேய உதவியைTNTJ தொண்டர்களும், குருதிக் கொடையளிப்பவர்களும்சந்தோசத்துடனும், தன்னார்வத்துடன்அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பித்ததை குறிப்பிட்டுக் காட்டினார்.
மேலும் இந்த உயிர் காக்கும் மகத்துவமான பணி என்றும், இதுபோன்ற நற்பணிகள் இந்திய தேசத்தின் சகோதரத்துவத்தையும், அன்பையும் போற்றும் விதத்தில் அமைந்தது. மேலும் நம் இந்திய தேசத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலித்து இந்தியர்களின் தியாகங்களையும், தேசப்பற்றையும் பிறநாடுகளில் பறைசாற்றும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரத்ததான முகாம் மனிதநேயத்தை வார்த்தைகள் மட்டுமல்லாமல் தங்களின் குருதி தியாகத்தாலும் வெளிப்படுத்தியிருந்தது மிகவும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது என்று தெரிவித்திருந்தார்.
இந்த முகாமில் அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலம் மற்றும் பத்தா கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த அனைத்து நிர்வாகிகளுக்கும் மருத்துவமனைகளின் இயக்குனர் நன்றி தெரிவித்தார்.