/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/திருவனந்தபுரம் சுதேசி சங்கமத்தின் 20வது ஆண்டு விழா, ஆனந்தோத்ஸவம் 2025திருவனந்தபுரம் சுதேசி சங்கமத்தின் 20வது ஆண்டு விழா, ஆனந்தோத்ஸவம் 2025
திருவனந்தபுரம் சுதேசி சங்கமத்தின் 20வது ஆண்டு விழா, ஆனந்தோத்ஸவம் 2025
திருவனந்தபுரம் சுதேசி சங்கமத்தின் 20வது ஆண்டு விழா, ஆனந்தோத்ஸவம் 2025
திருவனந்தபுரம் சுதேசி சங்கமத்தின் 20வது ஆண்டு விழா, ஆனந்தோத்ஸவம் 2025

திருவனந்தபுரம் சுதேசி சங்கமத்தின் 20வது ஆண்டு விழா, 'ஆனந்தோத்ஸவம் 2025,' ஜனவரி 17 அன்று ஜெத்தாவில் இந்திய துணை தூதரகத்தில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கேரளாவின் அழகிய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் ஹாசிம் கல்லம்பலம் சிறப்பாக தொடங்கி அனைவரையும் வரவேற்று சங்கத்தின் பன்னாட்டு உறவுகளையும் அதன் பண்பாட்டுப் பணிகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இந்திய ஹஜ் கான்சல் முஹம்மது அப்துல் ஜலீல் விழாவை துவக்கி வைத்து கேரளாவின் பண்பாட்டு வளத்தைப் பற்றியும் மற்றும் இந்த மாதிரியான விழாக்கள் உலகளவில் இந்திய கலாச்சாரத்தை விளக்குவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன என்று குறிப்பிட்டார். விழாவின் சிறப்பு அம்சமாக, திரைப்பட பின்னணிப் பாடகர்கள் அக்பர் கான் மற்றும் அஞ்சு ஜோசப் கலந்து கொண்டு, அவர்களின் மனம் மயக்கும் பாடல்களால் அனைவரையும் சிலிர்க்க வைத்தனர்.
ஜெத்தாவை சேர்ந்த முக்கிய சமூக ஆர்வலர் மசூத் பலராமபுரம் க்கு நாசர் நினைவு விருதையும், எழுத்தாளரும் கலாச்சார ஆர்வலருமான ரஜியாக்கு வீரன் மகேஷ் வேலாயுதன் விருதும் வழங்கப்பட்டது. TSS நிறுவனர் உறுப்பினர் சமூக ஆர்வலருமான ஷாஜீர் கணியபுரம், மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த NBL இன் சிஇஓ மற்றும் இளம் தொழில் முனைவோர் முஹம்மது நபீலும் கௌரவிக்கப்பட்டார். இந்த விருதுகள் மற்றும் கௌரவங்கள், கேரள சமூகத்தின் தனித்துவத்தையும் பன்னாட்டு சமூகத்தில் அதன் பங்களிப்பையும் உணர்த்தியது.
ஆனந்தோத்ஸவத்தின் முக்கிய ஈர்ப்புகளில் ஒன்று பழம்பெரும் வரலாறு 'கண்ணகி' நாட்டிய நாடகம் அற்புதமாக பினோம் ஆர்ஸ் அகாடமியின் நீதா ஜினுவின் குழுவினர் அரங்கேற்றினர். நடன ஆசிரியை புஷ்பா சுரேஷ் வடிவமைத்த குட் ஹோப் அகாடமியின் கிளாசிக்கல் நடனம், பினோம் அகாடமிக்காக TSSS கலைஞர்களான மௌஷ்மி ஷெரீப், ஐஸ்வர்யா தருண் மற்றும் சுபின் மாஷ் ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை அளித்தன.
மக்களால் பாராட்டப்பட்ட ஆனந்தோத்ஸவம் 2025, தலைவர் தருண் ரத்னாகரன் தலைமை தாங்க பொதுச் செயலாளர் ஷெரீப் பள்ளிபுரம் வரவேற்புரை வழங்க, பொருளாளர் ஷாஹின் ஷாஜகான் நன்றியுரை வழங்க TSS நிர்வாக உறுப்பினர்கள் நஜிப் வெஞ்சாரமூட், ஆமினா முஹம்மது, ஆயிஷா மரியம், மின்சா பாத்திமா, அஸ்னா முஹம்மது மற்றும் யாசீன் ஷெரீப் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்
- நமது செய்தியாளர் M. Siraj