/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/குவைத்தில் பாரிவள்ளல் நண்பர்கள் மன்றத்தின் 20 ஆம்ஆண்டு விழாகுவைத்தில் பாரிவள்ளல் நண்பர்கள் மன்றத்தின் 20 ஆம்ஆண்டு விழா
குவைத்தில் பாரிவள்ளல் நண்பர்கள் மன்றத்தின் 20 ஆம்ஆண்டு விழா
குவைத்தில் பாரிவள்ளல் நண்பர்கள் மன்றத்தின் 20 ஆம்ஆண்டு விழா
குவைத்தில் பாரிவள்ளல் நண்பர்கள் மன்றத்தின் 20 ஆம்ஆண்டு விழா

மன்றத்தின் குழந்தைகள் & மாஸ்டர் ஜிலானி இன்ஸ்டிடியூட் குரூப் குழந்தைகள் என 20 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர். பாரிவள்ளல் மன்றத் தலைவர் S.செல்லத்துரை பாரிவள்ளல் நண்பர்கள் மன்றம் செய்த நல்ல விஷயங்களை எடுத்துரைத்தார், மன்றத்தின் பொதுச்செயலாளர் Dr.சாமி P.வெங்கட் வரவேற்புரை வழங்கினார். கீரணி K.மதி (Social Activist) வாழ்த்துரை வழங்கினார்.
கங்கேஸ்வரன் பிள்ளை நிலா இசைக்குழு - குவைத், இசைக்குழுவினர் இசைமழையில் நனைய வைத்துவிட்டனர். 20ஆம் ஆண்டு மன்றத்தின் மலர் வெளியிடப்பட்டது; முதல் பிரதியை பெற்றுக்கொண்டவர் TVS ஹைதர் குரூப் சார்பாக கீரணி K.மதி பெற்றுக்கொண்டார். 2025 தினசரி காலண்டர் வெளியிடப்பட்டது.
மருத்துவம், கல்வி, மாற்றுத்திறனாளி, திருமணம், & இயற்கை சீற்றங்கள் என இதுவரை 240 குடும்பங்களுக்கு ரூபாய் 47 லட்சம் வழங்கி உள்ளோம். 20 ஆம் ஆண்டை முன்னிட்டு, 28 குடும்பங்களுக்கு சுமார் ரூபாய் 6 லட்சம் உதவி செய்ய உள்ளோம்.
மன்றப் பொருளாளர் T.இளங்கோவன் நன்ணியுரைவழங்கினார். நிகழ்ச்சியை சுந்தரி அசோக்குமார் மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார். கிராண்ட்உதயம் உணவகத்திலிருந்து மதியம் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் செல்லதுரை