ஜெர்மனியின் ஹாம்புர்க் நகரில் கடந்த சனிக்கிழமை ஜூன் 8ம் தேதி ஹாம்புர்க் தமிழ்ச் சங்கம் -தமிழ்ப் பள்ளி மிக விமரிசையாகத் துவங்கப்பட்டது. ஹாம்புர்க் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரில் நகர்களில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி மற்றும் பண்பாட்டினை பயிற்றுவிப்பதே இந்தப் பள்ளியின் முழுமுதல் நோக்கமாக விளங்கும் என வரவேற்புரையில் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஹாம்புர்க் பல்கலைக்கழகத்தில் தமிழ் சங்க இலக்கிய ஆய்வில் புகழ்ப்பெற்ற பேராசிரியர் ஈவா வில்டன் சிறப்பு விருந்தினராக வருகைதந்து, தமிழ் உயிரெழுத்தான 'அ' வினை எழுதி அரங்கு அதிர்ந்த கரவொலிக்கிடையே ஹாம்புர்க் தமிழ்ச் சங்கம் -தமிழ்ப் பள்ளியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். தாய்மொழியினை கற்பதில் உள்ள நற்பலன்களை எடுத்துரைத்து பள்ளியில் சேர்ந்துள்ள 30 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அவர் வாழ்த்துகளை க் கூறினார்.
ஹாம்புர்க் தமிழ்ச் சங்கம் e.V. தமிழகத்தில் இயங்கிவரும் தமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் கடந்த ஏப்ரல் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. அதன்படி தமிழ் மொழி வகுப்புகள், பாடத்திட்டங்கள் அனைத்தும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தினை சார்ந்ததாக இருக்கும். இவற்றைத் தவிர, பயிற்சி பட்டறைகள், சிறப்பு வகுப்புகள் என ஏனைய பயிற்சிகளை தமிழ்ப் பள்ளி அளிக்கும் என பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயக்குமார், மோகன்ராஜ் தெரிவித்தனர். மேற்கூறிய ஒப்பந்தம் நிறைவேற உறுதுணையாக இருந்த தமிழ் இணைய கல்விக் கழகத்தினருக்கு ஹாம்புர்க் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் தங்களது மனமார்ந்த நன்றியை பகிர்ந்து கொண்டனர்.
இந்தத் துவக்கவிழாவில் குழந்தைகள், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர், தமிழ்ச் சங்க தலைவர் சுதாகர் மற்றும் பல நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளியில் தங்களை இணைத்துக் கொண்ட பத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ ஆசிரியர்கள் என கலந்துகொண்ட 80 க்கும் மேற்பட்டவர்களுக்கு நாகராஜன் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்
ஹாம்புர்க் தமிழ்ச் சங்கம் சென்ற நவம்பர் மாதம் முதல் ஜெர்மானிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக உருவெடுத்தது. சங்கத்தின் முதற்கட்ட முன்னெடுப்பாக தமிழ்ப் பள்ளி துவங்கப்பெற்றது ஹாம்புர்க் நகரில் வாழும் தமிழர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. படங்கள்: ரிதன்யா, ராஜேஷ்கண்ணன்.
- தினமலர் வாசகர் நாகராஜன் தொப்பே