Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/ஐரோப்பா/செய்திகள்/தமிழ்க் கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் தமிழர்திருநாள்

தமிழ்க் கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் தமிழர்திருநாள்

தமிழ்க் கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் தமிழர்திருநாள்

தமிழ்க் கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயம் தமிழர்திருநாள்

ஜன 27, 2025


Google News
Latest Tamil News
யேர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட்டுடன் இணைந்து செயல்ப்படும் தமிழாலயங்கள் ஆண்டுதோறும் நடாத்திவரும் தமிழர்திருநாள் தைப்பொங்கல்விழா,ஆசிரியர்கள் மாணவர்கள் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து 'பொங்கலோ பொங்கல்' என்ற ஆரவாரத்துடன், மதகுருமார்களுடைய ஆசியுரையுடன் சுமார் 450 க்கு மேற்பட்ட பார்வையாளர்களோடு வெகு விமர்சையாக நடைபெற்றது.

தமிழ்த்திறனாய்வுப் போட்டி 2024 ல் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசளிப்புகள் நடைபெற்றது. தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் 2024 (International Tamil Educational Cultural Scientific Development Federation) நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வில் வளர் தமிழ் 12 (உயர்தரம்) சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டது.



கெசன் மாநில பாராளுமன்றத்தின் துணை குழு தலைவர் சுகாதாரம், சமூக விவகாரங்கள் மற்றும் ஒருங்கிணைப்புக்கான செய்தித் தொடர்பாளர் சுதந்திர ஜனநாயகக் கட்சியின் (FDP) உறுப்பினர் Yanki Pürsün சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.



தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்டுடன் இணைந்து செயல்படும் தமிழாலயங்களின நிர்வாகிகள், ஆசிரியர்களுடன், தமிழாலய இணை ஆசிரியர்கள், தமிழாலய பழைய மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களின் நெறியாக்கத்தில் சிறப்பு நடனங்கள், கவிதைகள், உரையாற்றல்கள், இசைநிகழ்வுகள் நாட்டிய நாடகம் போன்ற பல விஷேட நிகழ்வுகள் பெற்றோர்கள் பாதுகாவலர்கள் பார்வையாளர்களின் பலத்த கரகோசத்துடன் இடம்பெற்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us