/உலக தமிழர்/ஐரோப்பா/செய்திகள்/லண்டனில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்திலண்டனில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி
லண்டனில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி
லண்டனில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி
லண்டனில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி

ஷாரதா பீடத்தின் குருக்களின் வழிகாட்டுதலின் படி, “பாரதீய சம்ஸ்க்ருதி மற்றும் சம்ப்ரதாய” (BSS) குழுவினர் ரீடிங், லண்டனில் கடந்த இரண்டு வருடங்களாக ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தியை கொண்டாடி வருகின்றனர். 3 ஆவது வருடமான இம்முறை, இந்த விழா ரெட்டிங் இந்து கோவிலின் முக்கிய மண்டபத்தில் நடைபெற்றன, அதில் கணபதி பூஜை, குரு வந்தனம் மற்றும் ஸ்ரீங்கேரி ஷாரதா பீடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் மூர்த்திக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபடப்பட்டது. ருத்ராபிஷேகத்தின் போது 25 பேர் ஸ்ரீ ருத்ரம் ஓதினர்.
அன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் நடத்திய பல்லக்கி சேவை இருந்தது, இதில் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் மூர்த்தியை மண்டபத்துக்குள் ஊர்வலமாக எடுத்து செல்ல “ஹர ஹர சங்கரா, ஜெய சங்கரா” என்ற கோஷத்துடன் கர்நாடக இசை, சாக்ஸோபோன் மற்றும் செண்டை மேளம் ஒலித்தன.
பக்தர்கள் தோடகாஷ்டகம், பஜ கோவிந்தம், கனகதாரா ஸ்தோத்ரம் ஆகியவற்றை ஊர்வலத்தின் போது பாடி மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து மித்ர சேவா குழுவின் ஸ்ரீ ராஜகோபாலன் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் வாழ்க்கை பற்றிய தெய்வீக உபன்யாசம் நிகழ்த்தினார். நாள் முடிவில் பரதநாட்டியம், குச்சிபுடி, ஒடிஸி நடன சேவை மற்றும் கர்நாடக குரல் இசை சமர்ப்பிக்கப்பட்டது, அதன் பின் வந்திருந்த அனைத்த்து பக்தர்களுக்கு மகா பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் 'பாரதீய சம்ஸ்க்ருதி மற்றும் சம்ப்ரதாய' (BSS) குழுவின் உறுப்பினர்கள் சுதீர் என், சதீஷ் பிரபாகரன், மனோகர், சுபாஷ், கிஷோர் டி மற்றும் அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியினை தெரிவித்து ஸ்ரீ ஆதி சங்கரரிரின் அருள் ஆசிகளுடன் விடைபெற்றனர்.
இந்த வருடத்தின் வெற்றியால் ஊக்கப்பட்டு, “பாரதீய சம்ஸ்க்ருதி மற்றும் சம்ப்ரதாய” குழு அடுத்த ஆண்டு ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கர ஜெயந்தியை இன்னும் மகத்தான மற்றும் ஆன்மீகமாக வளமான அனுபவமாக மாற்ற ஊக்கத்துடன் செயலாற்றி வருகின்றனர்.