/உலக தமிழர்/ஐரோப்பா/செய்திகள்/சூரிச்சில் உயர்நிலை குண்டலினி யோகா பயிற்சிசூரிச்சில் உயர்நிலை குண்டலினி யோகா பயிற்சி
சூரிச்சில் உயர்நிலை குண்டலினி யோகா பயிற்சி
சூரிச்சில் உயர்நிலை குண்டலினி யோகா பயிற்சி
சூரிச்சில் உயர்நிலை குண்டலினி யோகா பயிற்சி
ஆக 29, 2023

தற்போது ஐரோப்பாவில் ஆன்மிக நல்லெண்ண யாத்திரை மேற்கொண்டுள்ள திருமூர்த்தி மலை தென்கயிலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் தத்துவ தவ உயர்ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி பரஞ்ஜோதியார் ஆகஸ்டு 25 முதல் 28 ஆம் தேதி வரை ஸ்விட்ஸர்லாந்து – சூரிச்சில் உயர்நிலை குண்டலினி யோகா பயிற்சி முகாமை நடத்தினார்கள்.
இதில் இந்திய வம்சாவளியினரோடு சூரிச்வாசிகளும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தகுந்ததாகும். முன்னதாக உலக அமைதித்தூதர் குருமகான் ஜெர்மணியின் மிக உயர்ந்த சிகரத்தில் அமர்ந்து ரஷ்யா – உக்ரைன் போர் முடிவுக்கு வரவும் – போரற்ற – பகையற்ற – பிணியற்ற சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும்நிறை பிரபஞ்சம் அமையவும் தவம் மேற்கொண்டார்கள்.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்