ஜன 29, 2025

தெற்கு ஆஸ்திரேலிய தலைநகரான அடிலெய்டு நகரில் கடந்த பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது . தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒன்று கூடி இந்த விழாவை மிகச்சிறப்பாக கொண்டாடின.
பொங்கல் விழாவில் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்கள், ஊர் கூடி பொங்கல் வைத்தல் , முளைப்பாரி, கும்மி அடித்தல், மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில் தெற்கு ஆஸ்திரேலிய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர். தமிழ் மக்கள் மட்டுமன்றி, ஆஸ்திரேலிய மற்றும் பல்வேறு நாட்டு மக்களும் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொண்டனர்
- தினமலர் வாசகர் கண்ணன் ராமகிருஷ்ணன்