Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/ஆசியா/செய்திகள்/தாய்லாந்து தமிழ் சங்கத்தின் தித்திக்கும் தீபாவளி நிகழ்ச்சிகள்..!!

தாய்லாந்து தமிழ் சங்கத்தின் தித்திக்கும் தீபாவளி நிகழ்ச்சிகள்..!!

தாய்லாந்து தமிழ் சங்கத்தின் தித்திக்கும் தீபாவளி நிகழ்ச்சிகள்..!!

தாய்லாந்து தமிழ் சங்கத்தின் தித்திக்கும் தீபாவளி நிகழ்ச்சிகள்..!!

நவ 22, 2024


Google News
Latest Tamil News
தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என்பதற்கு பல் வேறு தரவுகள், பல்வேறு விதமான வரலாறுகளை கட்டியம் கட்டி கூறிக்கொண்டிருந்தாலும், தீபம் என்று ஒன்று ஏற்றப்படும் போது, அங்கே இருள் அகற்றப்படுகிறது. அந்த இருளானது, அறியாமை, தீண்டாமை, பொறாமை, கல்லாமை, இல்லாமை, ஆற்றாமை என எதுவாக இருந்தாலும், அப்பேற்பட்ட எதிர்மறையான எண்ணங்களை அழித்து, அந்த தீப ஒளியானது, நேர்மறை எண்ணங்களை, மனித வாழ்வில் ஏற்படுத்துவதாக, நடுநிலையாளர்களாகிய பெரும்பாலான பொது ஐனங்கள் உணர்வதால், அனைவரும் தீபாவளியை மிகச் சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியா மட்டுமல்லாது, உலகெங்குமுள்ள இந்தியர்கள் வாழும் நாடுகளில், அங்குள்ள இந்திய சமுதாயம் மட்டுமல்லாது, அந்த நாடுகளில் வசிக்கும் உள்ளூர் மக்களும் இணைந்து, வாண வேடிக்கைகளுடன் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அந்த வகையில் தாய்லாந்து நாட்டில், தீபாவளி நிகழ்ச்சி பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போதைய தாய்லாந்து அரசாங்கமும், இது போன்ற சமுதாய நிகழ்ச்சிகளுக்கு ஆதரவு தந்து, அதை நாட்டின் சுற்றுலா மேம்பாட்டுக்கான ஒரு கருவியாக, ஆக்கப்பூர்வமான வகையில் பயன்படுத்திக் கொள்கிறது.



அந்த வரிசையில் தாய்லாந்தில் கடந்த 35 ஆண்டுகளாக சிறப்பாக தமிழ் மக்களை ஒன்றிணைக்கும், தாய்லாந்து தமிழ் சங்கம், இந்த வருட தீபாவளி நிகழ்ச்சிகளை கடந்த 17/11/24 ஞாயிறன்று தமிழக தொலைகாட்சி கலைஞர்களான நவீன், உதய் பிரகாஷ், அக்ஷயா முரளிதரன், நாகேஷ்வர் சுந்தரம் ஆகியோரை அழைத்து வந்து ஆட்டம், பாட்டம், பலகுரல் என கொண்டாட்டமாய், ரேடிசன் ப்ளூ ஹோட்டலில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை மகிழ்வித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக உயர் அதிகாரி முத்து , தாய்லாந்துக்கான இலங்கைக்கான தூதர் மற்றும் மலேசிய தூதரகத்தை சேர்ந்த திருமதி. ஜரின் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.



முத்தாய்பாக தாய்லாந்து வாழ் தமிழ் பெண்கள் கூடி ஆடிய குழு ஆட்டம் அரங்கத்தையே அதிர வைத்தது என்று சொன்னால் மிகையல்ல. இது போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று தமிழர்களின் சிறப்பு தரணியெங்கும் சிறக்கட்டும்.



_ நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us