Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/ஆசியா/செய்திகள்/ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலைக்கு விஜயம்

ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலைக்கு விஜயம்

ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலைக்கு விஜயம்

ரோட்டரி மாவட்ட ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலைக்கு விஜயம்

ஜன 07, 2025


Google News
Latest Tamil News
ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் சுசேனா ரணதுங்க திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார். ஆளுநரின் செயலாளர் காமினி மடநாயகே, உதவி.ஆளுநர் G. ஜெயபாலச்சந்திரனும் அவருடன் இணைந்து கொண்டார். திருகோணமலை ரோட்டரி ரோட்டரி கழகத்தின் தலைவர் ஜெகதீசன்ஆளுநர் மற்றும் அதிதிகளை வரவேற்றார். கிரேஸ் ஹோம் குழந்தைகள் வரவேற்பு நடனம் ஆடினர்

செயலாளர் ரவிச்சந்திரன் 2024 வருட செயல்பாடுகள் பற்றி சுருக்கமான விளக்கத்தை அளித்தார். ராஜாராம் மோகன் ஒரு அழகிய பாடல் மூலம் இசையை வழங்கினார். ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் 'லிட்டில் ஹார்ட்', 'தற்கொலை தடுப்பு' போன்ற ரோட்டரி தேசிய நிகழ்ச்சிகளை விளக்கினார்.



ஆளுநர் ஜெரோம் ராஜேந்திரம் தனது விஜயத்தின் போது, நிலாவெளி கோபாலபுரத்தில் உள்ள மகளிர் கிராம அபிவிருத்திச் சங்க மீன்பிடி அமைப்புகளுக்கு வலைகளுடன் கூடிய 10 மீன் பிடி படகுகளை (கேனோன்- Canoes) கையளித்தார். திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் PP PHF அகிலனின் நிதியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை தபால் நிலைய சந்தியில் அவர் திறந்து வைத்தார். திருகோணமலை ரோட்டரி சங்கத்தினால் பராமரிக்கப்படும் மான்கள் சரணாலயதையும் பார்வையிடார்.



2024- -2025 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட பிரபாகரன் நன்றியுரை நிகழ்த்தினார்.



- நமது செய்தியாளர் ஜி.குணாளன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us