Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/ஆசியா/செய்திகள்/ஜப்பானில் பொங்கல் விழா

ஜப்பானில் பொங்கல் விழா

ஜப்பானில் பொங்கல் விழா

ஜப்பானில் பொங்கல் விழா

பிப் 08, 2025


Google News
Latest Tamil News
ஜப்பான்வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய 32ஆம் பொங்கல் விழா தோக்கியோ நகரில் உள்ள எதோகாவா பண்பாட்டு மையத்தில் இனிதே நடந்தேறியது. சிறப்பு விருந்தினராக நகைச்சுவை பேச்சாளர் ராம்குமார் கலந்து கொண்டு அனைவரையும் சிரிப்புக்கடலில் ஆழ்த்தினார் .

தோக்கியோ மற்றும் தோக்கியோ அருகாமையில் வசிக்கின்ற ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் பெருந்திரளாக அரங்கத்தில் ஒன்று கூடி பொங்கல் விழாவில் பங்கேற்றனர். சுமார் மூன்று மணிநேரம் நடைபெற்ற பல்சுவை கலை நிகழ்ச்சிகளில் சிறார்களின் ஆடல் பாடல், வாய்ப்பாட்டு என்று தமிழர்களும் ஜப்பானியரும் இணைந்து பங்கு கொண்டது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு கலை நிகழ்ச்சி முடிந்த உடனேயே அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஆர்வலர்களை மேடைக்கு அழைத்து கௌரவித்தது பலராலும் பாராட்டப்பட்டது.



ஜப்பானியர் தமிழ் திரைப்படப்பாடல்களுக்கு நடனமாடியாதும் தமிழ் ஜப்பானிய நல்லுறவை பண்பாட்டுக்களத்தில் நிகழத்திக்காட்டியதாக பொங்கல் விழா அமைந்தது. விழாவின் இணைய மலரை (www.pongalmalar.com) ஸ்ரீபாலாஜி தென்னிந்திய உணவக நிறுவனர் தியாகக் குறிஞ்சி வெளியிட சிறப்பு விருந்தினர் ராம்குமார் பெற்றுக்கொண்டார். இந்த வருடத்தின் சிறப்பம்சம் விழாவின் தொகுப்பாளர்கள் மூவரும் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளைய தலைமுறையினர். குழந்தைப்பருவம் முதல் தோக்கியோவில் வளர்ந்த இவர்கள் அழகு தமிழில் தொகுத்தளித்தது வரும் தலைமுறைகளிலும் இந்தப் பாரம்பரியம் தொடரும் என்கிற நம்பிக்கையைக்கொடுத்தது.



தேநீர் இடைவேளைக்குப் பின்னர் விருந்தினர் நேரத்தில் தனக்கே உரிய பாணியில் ராம் குமார் தனது அக்மார்க் Alt-Tab Life of Ram நிகழ்ச்சியின் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரம் பார்வையாளர்களை முழுமையாக வசீகரித்தார். தனது சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை சுவாரசியமாக விவரித்து அதன் மூலமாக தான் கற்றுக் கொண்ட பாடங்களை விரித்துக்கொண்டு போனதை தமிழர்கள் ஆழ்ந்து ரசித்தனர். நிகழ்ச்சி முடிந்த பிறகும் ராம்குமார் இயல்பாகப்பேசிப் பழகியது பங்கு கொண்ட அனைவருக்கும் நிறைவளிப்பதாக அமைந்தது.



அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்ற பிங்கோ விளையாட்டோடு விழா இனிதே நிறைவுற்றது. பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்கள் மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியுடனும் மட்டுமல்லாது கையில் இரவுணவு அடங்கிய உணவுப்பெட்டியுடன் வீடு திரும்பினார்கள் என்பது நிகழ்ச்சியின் நிறைவான முத்தாய்ப்பு.



- தினமலர் வாசகர் ராஜன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us