/உலக தமிழர்/ஆசியா/செய்திகள்/மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி
மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி
மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி
மாற்றுத்திறனாளிகளுடன் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி
பிப் 15, 2025

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சி 15.02.2025 அன்று திருகோணமலை டொக்யார்ட் மெதடிஸ்ட் தேவாலயத்தில் மதிப்பிற்குரிய அருட் திரு தேவகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆண்டு இந்த மனிதாபிமான நிகழ்வுக்காக, மிகவும் பாதிக்கப்பட்ட ஏழை மாற்றுத் திறனாளிகளைத் தேர்ந்தெடுத்தோம். திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச்சபையின் ஒவ்வொரு உறுப்பினர்களும், இந்த ஆண்டு மனிதாபிமான நிகழ்வுக்காக, ஜனவரி 2024 இருந்து சுமார் ரூ. 2 லட்சம் பணத்தை சேமித்தார்கள்.
திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் அருட் பணியாளர்கள் இந்த மனிதாபிமான நிகழ் வில் கலந்து கொண்டு, 20 ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உலர் உணவு மற்றும் உடைகளை அளித்து சிறப்பித்தார்கள்.
- நமது செய்தியாளர் வைத்திய கலாநிதி ஜி.குணாளன்