Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/ஆப்பிரிக்கா/செய்திகள்/தர்சலாம் தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு

தர்சலாம் தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு

தர்சலாம் தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு

தர்சலாம் தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழ் புத்தாண்டு

ஏப் 23, 2023


Google News
தான்சானியா தர்சலாம்: தமிழ் சங்கத்தின் சார்பில் ஏப்ரல் 15 2023 அன்று மகிழா மண்டபத்தில் மாலை 6:00 மணி முதல் தமிழ் புத்தாண்டு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தமிழால் இணைவோம் தமிழால் பெருமை கொள்வோம் என்பதற்கு ஏற்ப 200க்கும் மேற்பட்ட தமிழ் சொந்தங்கள் தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்து, இஸ்லாம், கிறிஸ்துவ சமத்துவ வழிபாடு மற்றும் முக்கனி வழிபாட்டுடன் நிகழ்ச்சி தொடங்கியது. வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவதிலா? பெறுவதிலா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் தலைவராக ரிஸ்வான் பங்கேற்க போட்டியாளர்கள் மிகக் கருத்தாகவும் நகைச்சுவையாகவும் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து தமிழ் கலாச்சார நடனம், கலை நிகழ்ச்சி, தமிழ்நாடு சிறப்பு குறும்படம் ஆகியவை காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இரவு உணவு உடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. தமிழ்ச் சங்கத் தலைவர் கார்த்திக் அவர்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த தமிழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் போட்டியாளர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த தமிழ் சொந்தங்களுக்கு நன்றியுரை ஆற்றினார்.- தரிசலாமில் இருந்து தானேஷ் ராஜா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us