அக் 08, 2024

தென் ஆப்பிரிக்கா டர்பன் நகரில் உள்ள சின்மயா மிஷனில் நவராத்திரி கொண்டாடப்பட்டது. அக்டோபர் 3 ஆம் தேதி மதல் சத்சங்கம், நடனம் மற்றும் பஜனைகள் நடைபெற்றன.
நவராத்திரி விரதம் என்பது சக்தியை நோக்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்று. நவராத்திரி காலத்தில் முதல் மூன்று நாட்கள், வீரத்தை வேண்டி துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் செல்வத்தை வேண்டி இலட்சுமியையும், இறுதி மூன்று நாட்கள் கல்வி, கலைகளை வேண்டி கலைமகளையும் வழிபடுகின்றனர்.
இந்த விழா உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.