/உலக தமிழர்/ஆப்பிரிக்கா/செய்திகள்/எத்தியோப்பியா தமிழ்ச்சங்கத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் எத்தியோப்பியா தமிழ்ச்சங்கத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்
எத்தியோப்பியா தமிழ்ச்சங்கத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்
எத்தியோப்பியா தமிழ்ச்சங்கத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்
எத்தியோப்பியா தமிழ்ச்சங்கத் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்

இந்திய தூதரையும் மற்றும் தூதராக உயர் அதிகாரிகளையும் சங்கத்தின் தலைவர் சிவராமன், சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, முனைவர் ராஜலக்ஷ்மி, தண்டபாணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்
இந்திய தூதர், அவரது மனைவி குத்து விளக்கு ஏற்றி நாட்டுப்பண்ணுடன் விழாவை துவக்க, சங்கத்தின் தலைவர் வரவேற்புரை ஆற்ற, சங்கத்தின் செயலாளர் முனைவர் சரவணன் தமிழ் புத்தாண்டின் மகத்துவத்தை எடுத்துக்கூற இந்திய தூதரும் “காலை வணக்கம்” என்று ஆரம்பித்து சிறப்புரை ஆற்றினார்.
குழந்தை ரேணுகாவின் பரத நாட்டியம் வெகு சிறப்பாக அமைந்தது. அதைத்தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான ஆடலும் பாடலும் நடைபெற்றது அத்துடன் உறி அடித்தல் கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகள் அரங்கேறியது இவை அனைத்தையும் காண்போரை வியக்க வைத்தது.
நிகழ்ச்சிகளை மகாலட்சுமி தினகரன், கலா, விஜய், விமலா, சரவணன், விஜி வீர, கவிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
சங்க நிர்வாகிகள் அர்ஜுன்ராஜ், சீதாராமன், தினகரன், முனைவர் ஆனந்த் அன்பழகன், முனைவர் உமாபதி மற்றும் முனைவர் கணேஷ் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கியும் விழாவினை சிறப்பாக ஒருங்கிணைத்து வழி நடத்தினர்.
மதிய விருந்திற்க்கு பிறகு உப தலைவர் முருகன் துரைசாமி நன்றியுரை வழங்க தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.
- தினமலர் வாசகர் முருகன் துரைசாமி