Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ சாக்லெட்டில் முகம் பார்க்கலாம்

சாக்லெட்டில் முகம் பார்க்கலாம்

சாக்லெட்டில் முகம் பார்க்கலாம்

சாக்லெட்டில் முகம் பார்க்கலாம்

ADDED : ஜூன் 15, 2025 12:10 AM


Google News
Latest Tamil News
புதுமையை கொண்டாடி தீர்க்கும் நவீன யுகத்தில் வாழ்கிறோம். உற்பத்தியிலும் தயாரிப்பிலும் நிபுணர் கூட, சரியான மார்க்கெட்டிங் இல்லை என்றால் சந்தையை கைப்பற்றுவதில் சறுக்கி விழ வாய்ப்புள்ளது. விற்பனைக்கான வாய்ப்பை தீர்மானித்த பின்பே சாக்லெட் தயாரிப்பில் இறங்கி தற்போது மனிதமுகங்களை சாக்லெட் கவர்களில் இடம்பெறச் செய்து 'ஸ்டார்ட் அப்' மூலம் வெற்றி தொட்டுள்ளோம் என்கின்றனர் கோவை ஆஷா, கேரளா திருச்சூர் ஸ்ரீவிஷ்ணு.

நண்பர்களான இருவரும் படித்தது வெவ்வேறு துறை என்றாலும் தொழில் துறையை தேர்ந்தெடுத்து வெற்றிச்சுவடை பதிக்க துவங்கியுள்ளனர்.

'ஸ்ரீவிஷ்ணு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துள்ளார். நான் எம்.பி.ஏ., பைனான்ஸ் படித்து இருவரும் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தோம். விஷ்ணுவுக்கு தொழில் செய்ய ஆசை. எனக்கு நிர்வாகத் திறமை இருந்தது. அதனால் துணிந்து தொழிலில் இறங்கினோம்' என்கிறார் ஆஷா.

அவர் கூறியது: எல்லோரும் தான் சாக்லெட் தயாரிக்கின்றனர், நாம் என்ன புதுமையை தருவது என யோசித்தோம். சாக்லெட்டில் ரசாயன கலப்பு கூடாது என உறுதியாக இருந்தோம். வெறும் சாக்லேட் ஆக தயாரிக்காமல் நிலக்கடலை, பேரீச்சை சாக்லெட் என குறைந்த பட்ஜெட்டில் தயாரித்து கொடுத்தோம். நிலக்கடலை, பேரீச்சை மாற்று உணவாகவும் இருப்பதால் குழந்தைகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.

உணவின் தரம் நன்றாக இருந்தால் போதாது; அதன் 'பேக்கிங்' பெயர் சொல்ல வேண்டும் என்பதற்காக மனித முகங்களை சாக்லெட் கவர்களில் 'ஸ்கிரீன் பிரின்டிங்' செய்து பார்த்தோம். போர்வை, தலையணை உறை, காபி கப்களில் விருப்பமானவர்களின் போட்டோ பார்க்கும் போது சந்தோஷம் வரும். அந்த சந்தோஷத்தை சாக்லெட் வாங்கும் போதும் தர நினைத்தோம்.

நிறைய முயற்சிகளுக்கு பின்பே சாதிக்க முடிந்தது. சாக்லெட்டுக்காக போட்டோ பதித்த கவர் வாங்குவார்களா என சந்தேகம் வந்தது. செய்து கொடுத்த போது சாக்லெட் சுவையைத் தாண்டி அவர்கள் மனதில் நின்றது அந்த போட்டோ கவர் தான். கவரை துாக்கி எறியாமல் பத்திரப்படுத்தி வைப்பதை பார்த்ததும் 'பர்த்டே, திருமணம்' விழாக்களில் இந்த நடைமுறையை செயல்படுத்தினோம். ரூ. 15 சாக்லேட்டில் போட்டோவுடன் கூடிய கவர் சுற்றினால் கூடுதலாக ரூ.5 செலவாகும்.

குழந்தைகள் பிறந்தநாளன்று அவர்கள் முகம் பதித்த சாக்லெட் கவருடன் வழங்கும் அனுபவம் 'த்ரில்லிங்' என பெற்றோர் தெரிவித்த போது 'ஸ்டார்ட் அப்' புதுமையின் முதல் படி தொட்ட உணர்வு எங்களுக்கு கிடைத்தது. ஆண்டுதோறும் பர்த்டே போட்டோ எடுப்பது போல, சாக்லெட் கவர் போட்டோக்களை மாற்றுவது புதுமையான விஷயம். காதலை, திருமண நாளை கொண்டாட இந்த சாக்லெட் கவர்கள் உதவுகின்றன. தங்களது முகங்களை பார்த்த சந்தோஷத்தில் கவரை பிரித்து சாக்லெட் சுவைக்கும் போது அதன் தரமும் குறையாமல் தயாரிக்கிறோம் என்றார் ஆஷா.

இவர்களிடம் பேச89210 70844.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us