/வாராவாரம்/விருந்தினர் பகுதி/இனிது இனிது குழந்தை இலக்கியம் இனிது: ‛தன்வியின் பிறந்த நாள்' தந்த யூமா வாசுகிஇனிது இனிது குழந்தை இலக்கியம் இனிது: ‛தன்வியின் பிறந்த நாள்' தந்த யூமா வாசுகி
இனிது இனிது குழந்தை இலக்கியம் இனிது: ‛தன்வியின் பிறந்த நாள்' தந்த யூமா வாசுகி
இனிது இனிது குழந்தை இலக்கியம் இனிது: ‛தன்வியின் பிறந்த நாள்' தந்த யூமா வாசுகி
இனிது இனிது குழந்தை இலக்கியம் இனிது: ‛தன்வியின் பிறந்த நாள்' தந்த யூமா வாசுகி

* யூமா வாசுகி...வாசகர்களை கவரும் வித்தியாசமான பெயராக உள்ளதே...
எனது இயற்பெயர் மாரிமுத்து. நண்பர் யூசுப் பெயரின் முதலெழுத்து, என் பெயரின் முதலெழுத்து, என்னை வளர்த்த வாசுகி என்ற அக்காவின் பெயரை சேர்த்து 'யூமா வாசுகி' என்று வைத்துக்கொண்டேன்.
* தஞ்சை தமிழ் மண்ணில் பிறந்து வாழும் உங்களுக்கு மலையாள வாசம் வசமானது எப்படி?
நண்பர் எழுத்தாளர் ஜெயமோகன் தான் காரணம். அவரது குரு நித்யசைதன்ய யதி. இவர் பெரிய ஞானி. மலையாளம், ஆங்கிலத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். இவரை ஊட்டியில் ஆசிரமத்தில் சந்திக்க போயிருந்தோம். அப்போது சிறுவர்களுக்கான ஒரு மலையாள நுாலை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன். படிக்க முடியாமல் 'பார்த்து'க்கொண்டிருந்த போது, ஜெயமோகன் 'நீங்கள் மலையாளம் கற்றுக்கொண்டால் இந்த வகை அரிய நுால்களையும் படிக்கலாம்' என்று ஆர்வமூட்டினார். அதற்கு பிறகு கடும் முயற்சி செய்து மலையாளம் கற்றுக்கொண்டேன்.
* குழந்தைகளுக்காக எழுதுவது எளிதா...
குழந்தைகளை கூர்ந்து நோக்கினால் அவர்களின் நடவடிக்கையில் கவித்துவம் இருக்கும். எனவே எழுதும் போதும் நமக்கு அளவற்ற கவித்துவம் தேவைப்படும். வார்த்தைகள் அவர்களுக்கு புரிய வேண்டும். கதைகளை அவர்கள் மனதில் எளிதாக பதிய வைக்க வேண்டும்.
* பள்ளிக் குழந்தைகள், பாடப்புத்தகத்தை தவிர கதை நுால்கள் படிப்பது குறைந்து விட்டது என்ற பொதுக்கருத்து இருக்கும் போது, குழந்தை இலக்கியத்திற்கு முக்கியத்துவம் இருக்கிறதா?
நிச்சயமாக நிறைய நுால்கள் குழந்தைகளுக்கு தேவைப்படுகிறது. பள்ளியில் நுாலக பொறுப்பையும் நான் பார்க்கிறேன். வாசிப்பு இயக்கம் பேரில் தமிழக அரசு 150க்கும் மேற்பட்ட சிறு, சிறு வண்ணப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றை சிறுவர்கள் விரும்பி படிக்கிறார்கள், மீண்டும் கேட்டு வாங்கி படிக்கிறார்கள்.
* சிறுவர்களுக்கு அறிவியல் ரீதியாக அல்லது கற்பனையாக என்று எந்த மாதிரி கதைகளை எழுதுகிறீர்கள்?
விருது பெறும் 'தன்வியின் பிறந்தநாள்' நுாலில் 10 கதைகள் உள்ளன. குடும்ப உறவுகள், பள்ளிக்கூட சூழல், சுற்றுச்சூழல், மாற்றுத்திறன் குழந்தை, பிராணிகள் - குழந்தைகள் உறவு பற்றியெல்லாம் கதை எழுதியிருக்கிறேன். பல பரிமாணங்களில் எழுத விரும்புகிறேன். சிறுவர்களுக்கான தனிப்பாடல்களும் எழுதியுள்ளேன். இன்னும் தொகுக்கவில்லை.
* சிறுவர் இலக்கியத்தில் இன்னும் என்ன புதுமை செய்ய திட்டம்...
திட்டம் என்பதே என் வாழ்வில் இல்லை. தற்செயலாக தான் எதுவும் நடக்கிறது. இப்படியே கலை, இலக்கிய சூழலில் வாழவே எப்போதும் விரும்புகிறேன்.