/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ 'மோர் + ரசம் = முன்னேற்றம்' - முருகபாரதியின் தன்னலமற்ற பயணம் 'மோர் + ரசம் = முன்னேற்றம்' - முருகபாரதியின் தன்னலமற்ற பயணம்
'மோர் + ரசம் = முன்னேற்றம்' - முருகபாரதியின் தன்னலமற்ற பயணம்
'மோர் + ரசம் = முன்னேற்றம்' - முருகபாரதியின் தன்னலமற்ற பயணம்
'மோர் + ரசம் = முன்னேற்றம்' - முருகபாரதியின் தன்னலமற்ற பயணம்

பட்டங்களும், பயிற்சியாளர் பணியும்
படிப்பதில் ஆர்வம் அதிகம். ஐ.ஏ.எஸ்., கனவும் இருந்தது. பி.காம்., கல்லுாரியில் பயின்றேன். வீட்டில் வசதி இல்லாததால் எதில் எல்லாம் விருப்பம் இருந்ததோ அதை படிப்பாக மாற்றினேன். எம்.காம்., எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.பி.ஏ., உள்ளிட்ட 8 பட்ட மேற்படிப்புகளை தொலைதுார கல்வியில் பயின்றேன். 9 வயதில் இருந்தே பட்டிமன்றம், மேடைகளில் பேசுவது உள்ளிட்டவற்றில் ஈடுபட்டேன்.
சமூகப்பணி
இதுவரை 3 லட்சம் பேருக்கு பயிற்சியளித்துள்ளேன். அதில் நெருங்கிய 13 பேருடன் 2020ல் 'நீதான்' எனும் அறக்கட்டளை தொடங்கினேன். ஈட்டும் வருமானத்தை சமூக சேவைக்கு பயன்படுத்திவிடுவேன். அறக்கட்டளை மூலம், 3 மாணவர்கள் மேற்படிப்பு பயில்கின்றனர். அடுத்தவர்களுக்கு உதவும் மனம், நாட்டுப்பற்று, மொழிப்பற்று உள்ளிட்டவை அப்பாவிடம் இருந்து வந்தது.
நேரத்தை பயன்படுத்துங்கள்
நேரம் பொன் போன்றது என்பர். எனக்கு உயிர் போன்றது. பலர் நேரத்தை மேலாண்மை செய்ய முயல்வதால் மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். மேலாண்மை செய்வதை விட நேரத்தை பயன்படுத்த வேண் டும். கையைமீறி நடக்கும் விஷயங்களை விட கிடைக்கும் நேரத்தை பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவேன். இதனால் 'டென்ஷன்' இன்றி நினைத்தவற்றுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடிகிறது.


