/வாராவாரம்/உரத்த குரல்/உடல்நிலை குறித்து ரஜினி வெளிப்படை: தமிழக அரசியலில் புதுசுஉடல்நிலை குறித்து ரஜினி வெளிப்படை: தமிழக அரசியலில் புதுசு
உடல்நிலை குறித்து ரஜினி வெளிப்படை: தமிழக அரசியலில் புதுசு
உடல்நிலை குறித்து ரஜினி வெளிப்படை: தமிழக அரசியலில் புதுசு
உடல்நிலை குறித்து ரஜினி வெளிப்படை: தமிழக அரசியலில் புதுசு

இமேஜ் பார்ப்பவர்கள்
பொதுவாகவே தமிழகத்து அரசியல்வாதிகள் அதிலும் முதல்வராக இருந்தவர்கள் 'இமேஜ்' பார்ப்பவர்கள். கருணாநிதி, எம்.ஜி.ஆர்., எப்போதும் கருப்புக் கண்ணாடி அணிந்திருந்தனர். எம்.ஜி.ஆருக்கு தொப்பி ஸ்பெஷல். ஜெயலலிதாவிற்கு பிரத்யேக ஆடை 'ஸ்டைல்' இருந்தது. முதன்முதலாக ஜெ. முதல்வரான 1991-96ல் யாரும் இதுவரை அணியாத வித்தியாசமான 'கோட்' அணிந்து வலம் வந்தார்.மொத்தத்தில் பொது இடங்களில் தங்களை 'பளிச்' எனக் காட்டிக் கொள்வதில் இவர்கள் மூவரும் கவனமாக இருந்தனர்.
தனிப்பட்ட பிரச்னையா
ஆளும் முதல்வருக்கு பிரச்னை என்றால் குடிமகன்களும் கட்சித் தலைவருக்கு பிரச்னை என்றால் தொண்டர்களும் அறிந்திருப்பதில் தவறு இல்லை. அரசியல்வாதிகள் உடல்நிலை அவர்கள் தனிப்பட்ட விஷயம் என்று கருதினாலும் அவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக, அமைச்சர்களாக, முதல்வர்களாக பொதுவெளிக்கு வரும் போது அது ஓட்டளிக்கும் குடிமகனும் அறிந்திருக்க வேண்டிய விஷயமாகிறது. ஆனால் அரசியலில் இவை எல்லாம் எப்போதும் மூடி மறைக்கப்பட்ட விஷயங்களே.


