/வாராவாரம்/சிந்திப்போமா/வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!
வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!
வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!
வயிறு நிறையும்... ஆனால், ஆயுள் சுருங்கிவிடும்!

கல்கி கவியரசு
கட்டுரையாளர், ஒரு எழுத்தாளர். நீலகிரிமாவட்டம், வெலிங்டன் ராணுவ மையத்தில் உணவகம் நடத்துகிறார். பாரம்பரியஉணவு வகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்.
ஆயுள் நிர்ணயிக்கும்
சரிவிகித ஊட்டச்சத்து உணவை உட்கொண்ட மூதாதையர்கள், 100 வயதை கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்தனர். தற்போதைய தலைமுறையினர், 50 வயதை தாண்டுவதற்கு மருந்துகளையும், மருத்துவமனைகளையும் நாடி செல்கின்றனர். முன்பு இருப்பிடங்களின் அருகிலேயே உணவுப் பொருட்கள் விளைவித்து அறுவடை செய்து பயன்படுத்திய காலம் மாறி, சந்தை, கடைகளில் வாங்கும் பழக்கமாகி உள்ளது.
நோய் பாதிப்பு அதிகம்
பச்சை முட்டையில் உருவாக்கும் மையோனஸ், சாஸ் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கும் பீட்சா, சாண்ட்விச், பர்கர், ஷவர்மா போன்ற உணவுகளில், இளையோர் அளவு கடந்த ஈடுபாடு காட்டி உட்கொள்கின்றனர். இதனால் உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் தேங்கி உடல் பருமன், குழந்தையின்மை, நீர்கட்டி, தைராய்டு, மாரடைப்பு உட்பட பல வியாதிகளை விலை கொடுத்து வாங்கும் அவலம் ஏற்படுகிறது.


