
அளவற்ற பணம்
தாலிக்கு தங்கம், லேப்டாப், சைக்கிள் முதலிய நலத்திட்டங்களால், 90 சதவீத பெண்களைக் கவர்ந்து, பலம் கொண்டிருந்தவர் ஜெயலலிதா. அவருடைய வெற்றிடத்தை இனி, அ.தி.மு.க.,வில் யாராலும் நிரப்ப முடியாது. அ.தி.மு.க.,வில் தர்மயுத்தம் செய்தவரிடம், மொத்த உதிரி ஜாதி கட்சிகளையும் அதிக விலைக்கு வாங்கும் அளவற்ற பணம் இருக்கிறது. ஆனால், மக்கள் ஏன் இவர்களை நம்ப மறுக்கின்றனர், கூவத்துார் நாடகமா?
ஊழல் புகார்
கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசியது, அண்ணாமலை கொடுத்த பல ஊழல் புகார் ஆகியவற்றின் மீது, இதுவரை எந்த விசாரணையும் இல்லை. இதற்கெல்லாம் மேலாக, '2ஜி' புகழ் கனிமொழியை, 'ஆப்பரேஷன் சிந்துார்' குழுவில் சேர்த்து, வெளிநாட்டுக்கு அனுப்பி அழகு பார்த்தது பா.ஜ.,வின் மத்திய அரசு. இப்படி அனைத்து கவுரவங்களையும் அனுபவித்து விட்டு, 'மாநில அரசுக்கு மத்திய அரசு உதவுவதே இல்லை' என்று, தி.மு.க., கூறுகிறது.