தொலைநோக்கு பார்வை, கொள்கை உறுதி: இந்தியாவின் ராஜதந்திரி வாஜ்பாய்!
தொலைநோக்கு பார்வை, கொள்கை உறுதி: இந்தியாவின் ராஜதந்திரி வாஜ்பாய்!
தொலைநோக்கு பார்வை, கொள்கை உறுதி: இந்தியாவின் ராஜதந்திரி வாஜ்பாய்!
தொலைநோக்கு பார்வை, கொள்கை உறுதி: இந்தியாவின் ராஜதந்திரி வாஜ்பாய்!

கனவு கண்டார்
நம்மைச் சுற்றியுள்ள பல துறைகளில் வாஜ்பாய் தலைமையின் நீண்டகால தாக்கத்தை காண முடியும். தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, தகவல் தொடர்பு ஆகியவற்றில், பிரமாண்டமான வேகத்தைக் காட்டியவர் அவர்.
'ஆபரேஷன் சக்தி'
அவரது அரசு அப்போதுதான் பதவியேற்றிருந்தது. இருப்பினும் மே 11 அன்று, 'ஆபரேஷன் சக்தி' என்ற பொக்ரான் சோதனைகளை இந்தியா நடத்தியது. இந்த சோதனைகள் இந்திய அறிவியல் சமூகத்தின் வலிமைக்கு எடுத்துக்காட்டாக இருந்தன.
ஒரு ஓட்டு
பிரதமராக இருந்தபோது, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தனக்கே உரிய பாணியிலும், பொருளாழத்துடனும் எதிர்கொண்டு மழுங்கச்செய்தார். எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பணியாற்றியபோதும், அவரது வாழ்க்கையில் யாருக்கும் எதிராக ஒருபோதும் கசப்புணர்வை அவர் வெளிப்படுத்தியதில்லை. ஆனால், அவரை துரோகி என்று அழைக்கும் அளவுக்கு, காங்கிரஸ் தரம் தாழ்ந்து போனது!
அடையாளம்
நெருக்கடி நிலைக்குப் பின், 1977 தேர்தலுக்கு முன், அவர் தனது சொந்தக் கட்சியான ஜனசங்கத்தை, ஜனதா கட்சியில் இணைக்க ஒப்புக்கொண்டார். இது அவருக்கு ஒரு வேதனையான முடிவாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்போது அவருக்கும், மற்றவர்களுக்கும், அரசியலமைப்பைப் பாதுகாப்பது மட்டுமே முக்கியமானதாக இருந்தது.
எங்கள் பாக்கியம்
பா.ஜ.,வில் என்னைப் போன்ற பல தொண்டர்கள், அடல் போன்ற ஒருவருடன் கலந்துரையாடவும், அதன்வழி கற்றுக்கொள்ளவும் முடிந்தது, எங்களின் பாக்கியம். பா.ஜ.,வின் அடித்தளம் அவர். அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற மகத்தான தலைவர்களுடன், கட்சியை, அதன் துவக்க காலத்திலிருந்து அவர் வளர்த்தார்.
நல்லாட்சி
அவரது 100-வது பிறந்த நாளில், அவரது கொள்கைகளை நனவாக்கவும், இந்தியாவுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றவும், நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம். நல்லாட்சி, ஒற்றுமை, முன்னேற்றம் என்ற அவரது கொள்கைகளை உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்கப் பாடுபடுவோம். நம் நாட்டின் ஆற்றல் மீது அடல் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, உயர்ந்த இலக்கை அடையவும், கடினமாக உழைக்கவும் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது!


