sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/சிந்தனைக் களம்/ போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்துக்கு 'ஹைப்பர் லுாப்'

 போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்துக்கு 'ஹைப்பர் லுாப்'

 போக்குவரத்து துறையில் புதிய மாற்றத்துக்கு 'ஹைப்பர் லுாப்'

1


PUBLISHED ON : மே 03, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

1

PUBLISHED ON : மே 03, 2026 04:58 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- சேதுராமன் சாத்தப்பன் -

: இந்தியாவின் ஐந்தாவது போக்குவரத்து வழியாக ஹைப்பர்லூப் அறியப்பட்டு வந்தாலும், அதற்கான ஆராய்ச்சிகள் 2012ம் ஆண்டு முதல் தொடர்கிறது. இந்தியாவில், ஐ.ஐ.டி. மெட்ராஸில் உள்ள ஒரு மாணவர் குழு, 2017-ல் இந்தத் தொழில்நுட்ப பரிசோதனையை துவங்கி, அதற்கு ஆவிஷ்கார் ஹைப்பர்லுாப் என்று பெயரிட்டது. இந்நிறுவன பரிசோதனைகள், 2022-ல் 'TuTr' ஹைப்பர்லுாப் என்ற தங்களது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை நிறுவ வழிவகுத்தன.

எப்படி செயல்படுகிறது? ஐ.ஐ.டி-.,யின் ஆதரவுடன் உருவான இந்த ஸ்டார்ட்அப், ஹைப்பர்லுாப் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்படுகிறது. இந்த ஸ்டார்ட்அப், ஒரு வழித்தடத்தை உருவாக்க, லைனர் இன்டெக் ஷன் மோட்டார் (LIM), காந்த மிதப்பு மற்றும் வெற்றிடம் ஆகிய மூன்று தொழில்நுட்பங்களை ஒன்றிணைக்கிறது. ஒன்று மற்றொன்றுக்கு முன்நிபந்தனை ஆகும். மேலும் இந்த மூன்றும் இணைந்ததே 'ஹைப்பர்லுாப்' என்று அழைக்கப்படுகிறது, இது வெற்றிடச் சூழலில் இயங்கும் ஒரு உராய்வற்ற தொடர்வண்டி.

தற்போதைய அளவில், இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளான துறைமுகங்கள், கன்டெய்னர் டெர்மினல்கள், லாஜிஸ்டிக் பார்க் போன்றவற்றில் சரக்குப் போக்குவரத்துகளுடன் துவங்குகிறது. இதற்காக, மணிக்கு 200 கி.மீ., வரை வேகத்தை எட்டக்கூடியதும், எதிர்காலத்தில் ஹைப்பர்லூப்பாக மேம்படுத்தக்கூடிய வகையில் விரிவாக்கப்படக்கூடியதுமான LIM- அடிப்படையிலான வழித்தடங்கள் அமைக்கப்படுகின்றன.

தற்போது ஐ.ஐ.டி., மெட்ராஸில் உள்ள TuTr ஹைப்பர்லுாப் சோதனை நிலையத்தில் 4,10,-422 மீட்டர் நீளமுள்ள வெற்றிடக் குழாய் உள்ளது. இது தற்போது ஆசியாவிலேயே மிக நீளமானது என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள டிஸ்கவரி வளாகத்தில் அமைந்துள்ள இது, உலகின் மிக நீளமான ஹைப்பர்லுாப் சோதனை நிலையமாக மாறுவதற்காக மேலும், 4,0-50 மீட்டர் நீட்டிப்புப் பணிகளுக்கு நீட்டிக்கப்பட உள்ளது.

அதிவேக, மலிவான, நம்பகமான மற்றும் நீடித்த போக்குவரத்துக்கான ஹைப்பர்லுாப் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதும் வணிகமயமாக்குவதும் இந்த ஸ்டார்ட் அப் கம்பெனியின் முக்கிய நோக்கம். ஐ.ஐ.டி., மெட்ராஸில் நடக்கும் இந்த ஹைப்பர்லுாப் தொழில்நுட்ப மேம்பாட்டு முயற்சியில் ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கியப் பங்காளராக உள்ளது.

ஹைப்பர்லுாப் (உதாரணமாக) சென்னையிலிருந்து பெங்களூருக்கு 15 நிமிடங்களில் (350 கி.மீ. துாரம்) சென்றடைவதை இலக்காக வைத்து இருக்கிறது. ஆனால், இவர்களால் மிக விரைவாக எட்டக்கூடிய வேகம் மணிக்கு 600 கி.மீ. ஆகும். இதனால், பெங்களூரை எட்டுவதற்கு 30 - 35 நிமிடம் வரை ஆகும். இது வருங்காலத்தில் மிக குறைந்த அளவிலான பாதுகாப்பு சோதனைகளைக் கொண்ட ஒரு மெட்ரோ நிலையத்தைப் போன்றதாக இருக்கலாம்.

துறையின் எதிர்காலம் கடந்த, 2024ம் ஆண்டில், 12 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த உலகளாவிய ஹைப்பர்லுாப் தொழில்நுட்பச் சந்தை, 2030ம் ஆண்டு-க்குள் 60 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தால், ஹைப்பர்லுாப் தொழில்நுட்பம் நகரங்களின் போக்குவரத்து முறையை மாற்றக்கூடும். இது இந்தியாவின் மெட்ரோ ரயில் அமைப்புக்குத் துணையாகவோ அல்லது வலுவூட்டுவதாகவோ அமைந்து, நம் நாட்டின் போக்குவரத்து நிலப்பரப்பையே மாற்றியமைக்க வாய்ப்புள்ளது.

இணையதளம்: https://www.tutr.tech/ சந்தேகங் களுக்கு இ-மெயில்: sethuraman.sathappan @gmail.com, மொபைல் போன்: 98204 51259, இணைய தளம்: www.startupandbuisness news.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us