தமிழக அரசின் மீன் வளத்துறை சார்பில் சென்னை தீவுத்திடலில் நடந்துவரும் 'மீன்வளத் திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் கடல் உணவை ரசித்து ருசித்தனர்.

கடல் உணவை பிரபலப்படுத்தவும்,கடல் வணிகத்தை மேம்படுத்தவும் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அதற்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மீன் கண்காட்சி கூடத்தில் நீரில் விளையாடும் தங்க மீன்களையும்,சிங்க மீன்களையும்,நட்சத்திர மீன்களையும் குழந்தைகளுடன் வந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.

உணவுக்கூடத்தில் விற்பனை செய்யப்பட்ட கடல் உணவினை மக்கள் ரசித்து ருசித்தனர், முக்கியமாக பிரான் எனப்படும் இறால் வகையில் செய்யப்பட்ட பிரியாணி,மாமூஸ்,கட்லெட் உள்ளீட்ட உணவுகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.மீன் உணவுகள் சமைக்கும் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

நாளையுடன் நிறைவு பெறும் இந்த கண்காட்சிக்கான அனுமதி இலவசம்.