Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பொக்கிஷம்/ பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது...

பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது...

பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது...

பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது...

PUBLISHED ON : ஜூன் 12, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
பூ உதிர்ந்துவிடும் மாலையும் வாடிவிடும் ஆனால் அந்த பூவில் உள்ள தேன் ஒரு போதும் வாடாது கெடாது அது மட்டுமல்ல அந்த தேன் தான் சார்ந்த சேர்ந்த பொருளையும் கெடாமல் பாதுகாக்கும் இதை எல்லாம் சேர்த்து கவிஞர் கண்ணதாசன் ஒரு பாடலில் வைத்துவிட்டார் அந்த பாடல்தான் ஊட்டி வரை உறவில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் இடம் பெற்ற 'பூ-மாலையில் ஒர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது..'.Image 1431637இப்படி கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றி சிலாகித்து பேசியவர் கதாசிரியரும்,முன்னாள் தொலைக்காட்சி தயாரிப்பாளருமான எம்.எஸ்.பெருமாள்,அவரை பேசவிட்டு அழகு பார்த்தவர் இசைக்கவி ரமணன்.

காலங்களில் அவன் வசந்தம் என்ற கவிஞர் கண்ணதாசனின் புகழ் பாடும் 103 வது நிகழ்ச்சி சென்னை வாணிமகாலில் நடைபெற்றது.ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கண்ணதாசனோடு தொடர்புடைய பிரமுகரை அழைத்து வந்து இசைக்கவி ரமணன் பேசவைப்பார்.

இந்த முறை வந்து பேசியவர் பெருமாள்.

ஒரு முறை ரேடியோவில் ஒரு பாட்டை ஒலிபரப்பும் போது கவிஞர் வாலியின் பாடலை ஒலிபரப்பிவிட்டு பாடல் கவிஞர் கண்ணதாசன் என்று சொல்லிவிட்டோம் அடுத்த சில நிமிடத்தில் ஒரு போன் கால் பேசியவர் கண்ணதாசன்..இந்தப் பாடலை நான் எழுதவில்லை, எழுதியவர் கவிஞர் வாலி, படைப்பாளிக்குதான் உரிய புகழும் பொருளும் போய்ச்சேர வேண்டும் ஆகவே உடனே மறுப்பு அறிவிப்பை வெளியிடுங்கள் என்று சொன்னார்.

பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர்கதை எனது கதைதான் அந்தக் கதையை பிரமாதமாக படமாக்கியிருந்தார் அந்தப் படத்திற்கு பாட்டு எழுதும் சூழ்நிலையில்தான் கண்ணதாசனுடன் சந்திப்பு நிகழ்ந்தது அவர் ஒரு அதிசயம்.

அவரிடம் உள்ள ஒரே சிக்கல் பாடலின் முதல் சில வரிகளிலேயே மொத்த சினிமாவின் சராம்சத்தையும் சொல்லிவிடுவார் இத்தனைக்கும் அவரிடம் பாடல் எப்படி அமையவேண்டும் என்றுதான் சொல்வோம் ஆனால் படமே அந்த பாடலில் வந்துவிடும்.

ஒரு காலகட்டத்தில் குடும்பத்தின் மூத்த பெண்ணாக பிறந்தவள்தான் மொத்த குடும்பச்சுமையையும் தாங்குவாள் அவளது கஷ்ட நஷ்டங்களைத்தான் படங்கள் பேசும் இப்படி கருப்பொருள் ஒரே மாதிரியாக இருந்தாலும் பாடலில் வேறு வேறு கருக்கொண்டு பாடலை உருவாக்கித் தந்தார் கண்ணதாசன்.

இசை அமைப்பாளர் விஸ்வநாதனுடன் கண்ணதாசனுக்கு உள்ள நெருக்கமும் அன்பும் ஈடு சொல்ல இயலாதது இருவரும் பல சமயங்களில் குழந்தைகளைப் போல குறும்பு செய்து விளையாடுவர் அப்படி குறும்பாக பிறந்த பாடல்கள்தான் லா வரிசையில் முடியும் வான் நிலா என்ற பாடலும் மே வரிசையில் முடியும் அன்பு நடமாடும் கலைக்கூடமே என்ற பாடலும் ..இது போல பாடல் வரிகளாக தர அவரால்தான் முடிந்தது,முடியும்.

-எல்.முருகராஜ்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us