PUBLISHED ON : பிப் 25, 2024 12:00 AM

ஒவ்வாரு வருடமும் பிப்பரவரி மாதத்தின் ஆரம்பம் முதல் பதினைந்தாம் தேதி வரை ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெறும் சூரஜ்குண்ட் மேளா, நடந்து முடிந்துள்ள நிலையில் விழா சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது.
வெளிநாட்டு விருந்தினர்கள் உள்பட பத்து லட்சம் பார்வையாளர்களால் பார்தது ரசிக்கப்பட்ட இந்த மேளாவானது கைவினைப் பொருட்களின் களஞ்சியமாக திகழ்ந்தது,ஒவ்வொரு மாநிலத்திலும் புகழ்பெற்று விளங்கும் கைவினைப் பொருட்கள் அனைத்தும் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
மாநிலத்தின் பங்கேற்பு மட்டுமல்லாது ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள கைவினைக்கலைஞர்களின் பங்களிப்பும் இருப்பதால் இந்த மேளா சர்வதேச மேளாவாக பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாலை நேரத்தில் பல்வேறு மரபு சார்ந்த நடன நிகழ்வுகளைக் காணவும், பராம்பரிய உணவுகளை ருசித்துப் பார்க்கவும் இளைஞர்களும் அதிகளவில் வருகைபுரிந்தனர்.
மொத்தத்தில் மரபு சார்ந்த கலைகளும்,கைவினைப் பொருட்களும் இந்த சூரஜ்குண்ட் மேளாவில் உயர்வு பெற்றன.
-எல்.முருகராஜ்