Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

PUBLISHED ON : ஜூலை 15, 2024


Google News
Latest Tamil News
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

01. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், 'ஹைப்ரிட்' மின்சார கார்களுக்கான பதிவுக் கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாக எந்த மாநில அரசு அறிவித்துள்ளது?

அ. தமிழகம்,

ஆ. மிசோரம்

இ. மத்தியப்பிரதேசம்

ஈ. உத்தரப்பிரதேசம்

02. உலகளவில் புலம்பெயர்ந்தோர் வாழ்வதற்கு ஏற்ற சகாயமான நாடுகளின் பட்டியலில், இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளதாக, 'இன்டர்நேஷன் ஸ்டடி' தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது?

அ. முதலாவது,

ஆ. ஆறாவது

இ. மூன்றாவது,

ஈ. எட்டாவது

03. ஈரான் நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள, சீர்திருத்த ஆதரவாளர் யார்?

அ. மசூத் பெசஸ்கியான்

ஆ. அலி காமெனி

இ. இம்ராஹிம் ரெய்சி

ஈ. அலி பகேரி

04. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும், சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானிலும், எதற்கான பயிற்சி நிறுவனங்களை ஏற்படுத்த, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது?

அ. ராணுவம்,

ஆ. விமானம்

இ. கப்பல்,

ஈ. காவல்

05. டில்லியில், வாகனங்களுக்கான பேன்சி பதிவு எண் பெறுவதற்கு நடத்தப்பட்ட ஏலத்தில், ரூ.23.4 லட்சத்திற்கு ஏலம் போன எண் எது?

அ. 0009,

ஆ. 0003

இ. 0001,

ஈ. 0005

06. பிரிட்டனில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதன் மூலம், புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர்?

அ. ரிஷி சுனக்

ஆ. எட் டேவே

இ. கியெர் ஸ்டார்மர்

ஈ. ஜான் சுவின்னி

07. சென்னை ஐ.ஐ.டி.யும், இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலையும், கோவை கே.எம்.சி.ஹெச். ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து, எதன் தரத்தை அறிவதற்கான படிப்பை, சென்னை ஐ.ஐ.டி.யில் சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளன?

அ. காற்று,

ஆ. உணவு

இ. அரிசி,

ஈ. நீர்

08. இந்திய அணியின் சிறந்த வீரர், கேப்டன், பயிற்சியாளராக முத்திரை பதித்துள்ள டிராவிட்டுக்கு, பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று சமீபத்தில் கூறிய இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்?

அ. சுனில் கவாஸ்கர்

ஆ. அனில் கும்ப்ளே

இ. ஸ்ரீகாந்த்,

ஈ. ரவி சாஸ்திரி

விடைகள்: 1. ஈ, 2. ஆ, 3. அ, 4. ஆ, 5. இ, 6. இ, 7. ஈ, 8. அ.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us