Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/கணினி அறிவியல்

கணினி அறிவியல்

கணினி அறிவியல்

கணினி அறிவியல்

PUBLISHED ON : மே 19, 2025


Google News
Latest Tamil News
ASCII (அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் கோட் ஃபார் இன்ஃபர்மேஷன் இன்டர்சேஞ்ச்) என்பது கணினிகள் மற்றும் மின்னணு சாதனங்களில் உரைகளை (Text) பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக (Text Representation) உருவாக்கப்பட்ட குறியீட்டு முறையாகும். இது 1963ஆம் ஆண்டு அமெரிக்கத் தேசிய தரநிலைகள் நிறுவனத்தால் (ANSI) அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒவ்வோர் எழுத்து, இலக்கம் அல்லது சிறப்பு எழுத்துக்குறி (Special Character) போன்றவற்றுக்கு ஒரு தனித்துவமான எண்ணைக் (Decimal value) கொண்டது. இந்த எண்கள் 0 முதல் 127 வரையிலான மதிப்புகளைக் கொண்டிருக்கும். ASCII குறியீடு இல்லாமல், கணினிகள் எழுத்துக்களைப் புரிந்துகொள்ள முடியாது. ASCII ஆனது எழுத்துக்களை எண்களில் மாற்றி, கணினி புரிந்து கொள்ளும் முறையில் மாற்றுகிறது. உதாரணமாக 'Hello' என்ற சொல் ASCII இல் 72, 101, 108, 108, 111 ஆகச் சேமிக்கப்படும்.

கீழே சில எழுத்துகள் தரப்பட்டுள்ளன. அவற்றின் சரியான ASCII மதிப்பைக் கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.

ASCII மதிப்பு என்ன?



1. 'A' என்பதன் ASCII மதிப்பு? ______

2. '@' என்பதன் ASCII மதிப்பு? ______

3. 'B' என்பதன் ASCII மதிப்பு? ______

4. '&' என்பதன் ASCII மதிப்பு? ______

5. 'k' என்பதன் ASCII மதிப்பு? ______

6. '#' என்பதன் ASCII மதிப்பு? ______

7. '?' என்பதன் ASCII மதிப்பு? ______

8. 'T' என்பதன் ASCII மதிப்பு? ______

விடைகள்:

1. 65

2. 64

3. 66

4. 38

5. 107

6. 35

7. 63

8. 84





      Our Apps Available On




      Dinamalar

      Follow us