Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

PUBLISHED ON : ஜூலை 07, 2025


Google News
Latest Tamil News
நமது நாளிதழில் வரும் செய்திகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் அல்லவா? அப்படியானால், பின்வரும் கேள்விகளுக்குச் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்.

1. இந்தியாவின் தார்வாட் விவசாய பல்கலையின் எந்த இரு உணவுப் பொருட்கள், 'ஆக்சியம் - 4' திட்ட ஆராய்ச்சிக்காக, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன?

அ. தக்காளி, பீட்ரூட்

ஆ. கடலைப்பருப்பு, கடுகு

இ. பாசிப்பயறு,வெந்தய விதை

ஈ. உளுந்து, சீரகம்

2. இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள கட்சிகள், வெள்ளித்திரையிலும் தமது தேர்தல் பிரசாரங்களைத் தொடங்கியுள்ளன?

அ. கர்நாடகம்

ஆ. மேற்குவங்கம்

இ. சட்டீஸ்கர்

ஈ. மிசோரம்

3. மாணவர்களின் உடல்நலத்தை மேம்படுத்த, தமிழகத்தின் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், பள்ளிக்கல்வித்துறை புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள திட்டத்தின் பெயர் என்ன?

அ. ஸ்நாக்ஸ் பெல்

ஆ. வாட்டர் பெல்

இ. டிரிங்க் பெல்

ஈ. தண்ணீர் அருந்து



4. நாட்டிலேயே முதன்முறையாக எந்த மாநிலத்தில், மொபைல்போன் செயலி வாயிலாக ஓட்டுப்பதிவு செய்யும் நடைமுறையை, சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தியது?


அ. பீகார்

ஆ. தமிழகம்

இ. குஜராத்

ஈ. தெலங்கானா

5. இந்தியாவின் உளவு அமைப்பான, 'ரா' எனப்படும், ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி யார்?

அ. ஏ.கே.வர்மா

ஆ. சங்கரன் நாயர்

இ. அமர்ஜித் சிங்

ஈ. பராக் ஜெயின்



6. உஸ்பெகிஸ்தானில் நடந்த உஸ் செஸ் கோப்பை தொடரில், மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீரர்?


அ. மேக்னஸ் கார்ல்சன்

ஆ. குகேஷ்

இ. பிரக்ஞானந்தா

ஈ. அர்ஜுன் எரிகேசி

விடைகள்: 1. இ, 2. ஆ, 3. ஆ, 4. அ, 5. ஈ, 6. இ.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us