Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

PUBLISHED ON : ஜூன் 30, 2025


Google News
Latest Tamil News
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.



1. சமீபத்தில், இந்தியாவின் எத்தனை மாநிலங்களில் நடந்த, மொத்தம் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாயின?


அ. ஐந்து

ஆ. மூன்று

இ. இரண்டு

ஈ. நான்கு

2. சர்வதேச உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தின் தெற்காசிய பிரிவு, இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைகிறது?

அ. தமிழ்நாடு

ஆ. தெலங்கானா

இ. உத்தரப்பிரதேசம்

ஈ. சிக்கிம்

3. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கான மேயர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளவர்?

அ. ஜோஹ்ரம் மம்தானி

ஆ. எரிக் ஆடம்

இ. ஆண்ட்ரிவ் கியுமோ

ஈ. கர்ட்டிஸ் ஸ்லிவா

4. ஐக்கிய நாடுகள் சபையின், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை அடையும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் முதன்முறையாக, முதல் 100 இடங்களுக்குள் இந்தியா நுழைந்துள்ளது. எந்த இடத்தில் உள்ளது?

அ. 25

ஆ. 40

இ. 56

ஈ. 99

5. கடந்தாண்டு நடந்த லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில், அதிகச் செலவு செய்த கட்சிகள் பட்டியலில், 1,494 கோடி ரூபாயுடன், எந்தக் கட்சி முதலிடத்தில் உள்ளது?

அ. காங்கிரஸ்

ஆ. ஆம் ஆத்மி

இ. பாரதிய ஜனதா

ஈ. பகுஜன் சமாஜ்

6. மலேசியாவில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் இரட்டையர் சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்று பிரிவுகளில் இந்திய அணி, 'ஹாட்ரிக்' பதக்கம் வென்றுள்ளது. என்ன பதக்கம்?

அ. தங்கம்

ஆ. வெள்ளி

இ. வெண்கலம்

ஈ. பிளாட்டினம்

விடைகள்:

1. ஈ,

2. இ,

3. அ,

4. ஈ,

5. இ,

6. அ.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us