Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

PUBLISHED ON : ஏப் 07, 2025


Google News
Latest Tamil News
உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. தமிழகத்தில் முதன்முறையாக, 14வது உலகக் கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள், எந்த இரு மாவட்டங்களில் நடக்க உள்ளன?

அ. ஈரோடு, சேலம்

ஆ. கோவை, சென்னை

இ. சென்னை, மதுரை

ஈ. மதுரை, கோவை

2. 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக பொருட்களை வினியோகம் செய்யும் சேவையை, 'ஸ்கை ஏர்' எனும் தனியார் நிறுவனம், இந்தியாவின் எந்தப் பகுதியில் சமீபத்தில் தொடங்கியுள்ளது?

அ. சென்னை

ஆ. பெங்களூரு

இ. கோல்கட்டா

ஈ. ஹைதராபாத்

3. தமிழகத்தின் எந்தப் பகுதியில் உள்ள சிறப்புமிக்க வெற்றிலைக்கு, சமீபத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது?

அ. ராஜபாளையம்

ஆ. ஆம்பூர்

இ. புதுக்கோட்டை

ஈ. கும்பகோணம்

4. ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எம்.டி.பத்ராவின் பதவிக்காலம் கடந்த ஜனவரியில் முடிவடைந்ததை அடுத்து, புதிய துணை கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளவர்?

அ. பூனம் குப்தா

ஆ. சனம் ரூத்

இ. சுந்தரவாசன்

ஈ. அமித் தேவ்

5. மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அமைந்துள்ள பனாமா கால்வாயை, 1904 - 1914 ஆண்டுகளில் எந்த நாடு கட்டியது?

அ. பிரேசில்

ஆ. மெக்சிகோ

இ. அமெரிக்கா

ஈ. கொலம்பியா

6. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், எந்தத் துறையின் சார்பில், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் சார்ந்த சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது?

அ. அறநிலையம்

ஆ. தொல்லியல்

இ. உயர்கல்வி

ஈ. பள்ளிக்கல்வி

7. வாடகைக் கார், ஆட்டோ, பைக் மொபைல்போன் செயலிகளுக்குப் போட்டியாக, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விரைவில் மத்திய அரசு செயல்படுத்த உள்ள திட்டத்தின் பெயர் என்ன?

அ. டாக்சி சல்லோ

ஆ. கால் டாக்சி

இ. கோ டாக்சி

ஈ. கூட்டுறவு டாக்சி

8. மும்பையில் நடந்த, சர்வதேச இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன் போட்டியில், பட்டம் வென்ற இந்திய வீராங்கனை யார்?

அ. அனாஹத் சிங்

ஆ. ஜோஷ்னா

இ. தீபிகா

ஈ. தன்வி

விடைகள்: 1. இ 2. ஆ 3. ஈ 4. அ 5. இ 6. ஆ 7. ஈ 8. அ




      Our Apps Available On




      Dinamalar

      Follow us